For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழி தோண்டுவது, குண்டு வைப்பது, மக்களை தாக்குவது.. சட்டிஸ்கர் தேர்தலை நிறுத்த நக்சல்கள் சதி!

சட்டிஸ்கரில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், நக்சல்கள் தேர்தலை நிறுத்த நிறைய சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Google Oneindia Tamil News

ராய்பூர்: சட்டிஸ்கரில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், நக்சல்கள் தேர்தலை நிறுத்த நிறைய சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

குண்டு வைப்பது, குழி தோண்டுவது, துப்பாக்கியால் சுடுவது என்று நிறைய வேலைகளை செய்து சட்டிஸ்கரில் நாளை நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலை தடுத்த நிறுத்த நக்சல்கள் நிறைய திட்டமிட்டு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சட்டிஸ்கரில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் அங்கு 90 தொகுதிகள் உள்ளது.

அங்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு நாளையும், வரும் 20 தேதி 72 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும். இந்த தேர்தலின் போது தாக்குதல் நடத்த நக்சல்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

எங்கு

எங்கு

நாளை தேர்தல் நடக்க உள்ள 12 தொகுதிகளும் நக்சல் தாக்குதல் நிறைந்த தொகுதிகள் ஆகும். இதனாக அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அங்கு ஆறு இடங்களில் குண்டு வெடித்துள்ளது. சட்டிஸ்கரில் தாண்டேவாடா காட்டுப்பகுதி, பிஜப்பூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இன்று மட்டும் இதனால் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

நிறைய குழிகள்

நிறைய குழிகள்

இந்த நிலையில் சட்டிஸ்கரில் நிறைய காட்டுப்பாதைகள் ஒரு வழி பாதைகளில் நக்சல்கள் குழி தோண்டி அதை மறைத்து வைத்து இருக்கிறார்கள். வாகனங்கள், மக்கள் அந்த வழியாக செல்வதை தடுக்கும் வகையில் இந்த வேலையை அவர்கள் செய்து வைத்துள்ளனர். தற்போது பாதுகாப்பு படையினர் அந்த குழிகள் சிலவற்றை கண்டுபிடித்து மூடியுள்ளனர்.

ஹெலிகாப்டர்களை தாக்க திட்டம்

ஹெலிகாப்டர்களை தாக்க திட்டம்

அதேபோல் நக்சல் துப்பாக்கிகள் மூலம் அங்கு வரும் ஹெலிகாப்டர்களை தாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. அதாவது அங்கு ஹெலிகாப்டரில் வரும் அரசியல்வாதிகளையும், அதிகாரிங்களை தாக்குவதற்காக, ஹாலிகாப்டர்கள் இறங்கும் இடம் என்று கணிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் பதுங்கு குழிகளை தோண்டி தாக்குதல் முடிவெடுத்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

திருட திட்டம்

திருட திட்டம்

இதோடு, நக்சல்கள், வாக்களிக்கும் எந்திரத்தை திருடும் திட்டத்தில் இருப்பதாகவும் பாதுகாப்பு துறைக்கு தகவல் வந்துள்ளது. அதாவது அங்கு வாக்களிக்கும் எந்திரங்களை எடுத்து செல்லும் வழியிலேயே அதை மறித்து திருட அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
Chhattisgarh election: Naxals got many plans to stop the polling in 12 red zone districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X