For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா...முதல் பாலே சிக்சரா! சட்டீஸ்கர் எக்ஸிட்போல் முடிவால் பாஜக உற்சாகம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சத்திஷ்கரில் வெற்றி யார் பக்கம் ?... வெளியானது கருத்து கணிப்பு முடிவு

    ராய்ப்பூர்: சட்டிஸ்கர் மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய டைம்ஸ் நவ்வின் கருத்துக்கணிப்பில் பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் மாதம் வாக்குப்பதிவு நடந்த நிலையில், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடந்தது முடிந்தது.

    Chhattisgarh Exit Poll 2018 : Times Now-CNX predict 46 seats for BJP

    தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் மாதம் வாக்குப்பதிவு நடந்த நிலையில், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்ததால் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது.

    இதில் சட்டிஸ்கரில் பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ் நவ்- சிஎன்எஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டீஸ்கரில் பாஜக 46 தொகுதிகளில் வெல்லும் என்று அந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் 35 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் டைம்ஸ் நவ் தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சி 7 தொகுதிகளிலும், பிறர் 2 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் கணித்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய முதல் கருத்து கணிப்பே தங்களுக்கு சாதகமாக இருப்பதை கண்டு பாஜக தலைமை உற்சாகத்தில் உள்ளது.

    சட்டீஸ்கரில் ரமன் சிங் தலைமையிலான பாஜக அரசு 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது.

    சட்டீஸ்கரில் மொத்தம் உள்ள 90 இடங்களில் கடந்த மாதம் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அங்கு இதுவரை இல்லாத அளவாக 76,35 சதவீதம் வாக்குகள் பதிவானது. இங்கு வெல்லப்போவது யார் என்பது வருகிற 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் மூலம் தெரிந்துவிடும்.. இதேபோல் ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா உள்பட மற்ற மாநிலங்களில் யார் வெல்வார்கள் என்பதும் வரும் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.

    English summary
    The election to the 90-member assembly was held in two phase in Chhattisgarh. Times Now-CNX exit poll predict 46 seats for BJP in Chhattisgarh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X