For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்போன் இல்லாதவர்கள். . தடுப்பூசிக்கு பதிவு செய்ய புதிய தளம், உதவி மையங்கள்.... அசத்தும் சத்தீஸ்கர்

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: செல்போன் இல்லாதவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த புதிய இணையதளத்தை அறிவித்துள்ள சத்தீஸ்கர் அரசு, மக்கள் இதில் பதிவு செய்ய உதவ மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான உதவி மையங்களையும் அமைக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தீவிரம் அதிகரித்து வருவதால், தடுப்பூசி பணிகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ரூ.971 கோடி செலவு.. 'சென்ட்ரல் விஸ்டா' கட்டுமான பணியை போட்டோ, வீடியோ எடுக்க தடை.. மோடி அரசு உத்தரவு ரூ.971 கோடி செலவு.. 'சென்ட்ரல் விஸ்டா' கட்டுமான பணியை போட்டோ, வீடியோ எடுக்க தடை.. மோடி அரசு உத்தரவு

ஆனால் தடுப்பூசி எடுத்துக் கொள்ள விரும்பும் அனைவரும் நிச்சயம் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேசிய அளவில் தடுப்பூசி பணிகள்

தேசிய அளவில் தடுப்பூசி பணிகள்

தேசிய அளவில் தடுப்பூசி முன்பதிவுக்குக் கோவின் தளம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இதில் முன்பதிவு செய்யக் கட்டாயம் மொபைல் எண் தேவை. இதனால் நாட்டில் செல்போன் மற்றும் இணைய வசதி இல்லாதவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றமும் சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது.

செல்போன் இல்லாதவர்களுக்கு புதிய தளம்

செல்போன் இல்லாதவர்களுக்கு புதிய தளம்

இந்நிலையில், சத்தீஸகர் அரசு மாநிலத்தில் இணையம் மற்றும் செல்போன் வசதியைக் கொண்டிருக்காதவர்கள் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய புதிய தளத்தைத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் இதில் முன்பதிவு செய்ய உதவும் வகையில் மாநிலத்தில் கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட உதவி மையங்களையும் ஏற்படுத்தவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வர் கருத்து

முதல்வர் கருத்து

மாநிலத்தில் அதிகளவில் இருக்கும் கிராமப்புற மக்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும், அவர் கூறுகையில், "மாநிலத்தில் 48% மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர். சில பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் மொமைபல் கூட இல்லை. அவர்களுக்கு இந்தத் தளம் உதவும்" என்று அவர் தெரிவித்தார்.

புதிய தளம்

புதிய தளம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் http://cgteeka.cgstate.gov.in/user-registration என்ற தளத்தில் மொபைல் இல்லாதவர்கள் உதவி மையங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், மாநிலத்தில் எங்கு எப்போது தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்த தகவல்களையும் இதே தளத்தில் மக்கள் அறிந்து கொள்ளலாம்.

English summary
Chhattisgarh's new portal for corona vaccination of people without mobile.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X