For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்கு பதிவு இயந்திரத்துக்கு தேங்காய் உடைத்தாரே.. அந்த அமைச்சர் என்ன ஆனார் தெரியுமா??

சட்டீஸ்கரில் அமைச்சர் தயால்தாஸ் பாஹல் படுதோல்வியை தழுவி உள்ளார்.

Google Oneindia Tamil News

சத்தீஸ்கர்: ஓட்டு மிஷினுக்கு தேங்காய் உடைச்சாரே... அந்த மந்திரி நிலைமையும் இப்போது பரிதாபம்தான்!!

சட்டீஸ்கரில் நேற்று வாக்கு எண்ண ஆரம்பித்ததில் இருந்தே காங்கிரஸ் வலுவான முன்னிலை பெற்றது. 90 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் காங்கிரஸ் 67 இடங்களை கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தது.

பாஜகவோ வெறும் 15 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 15 ஆண்டு கால பாஜக ஆட்சிக்கு காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளதால் பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வியை தான் சந்தித்துள்ளனர்.

தயால்தாஸ் பாஹல்

தயால்தாஸ் பாஹல்

இதில் ஒருவர்தான் சுற்றுலா துறை அமைச்சர் தயால்தாஸ் பாஹல். இவர்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி சாவடிக்கு சென்று பூஜை செய்தவர்.

சென்டிமென்ட்

இவர் நவகார்க் என்ற தொகுதியில் போட்டியிட்டார். அங்கு வெற்றியும் பெற்றார். அதனால் சென்டிமென்ட் கருதி இதே தொகுதியில் இந்த முறையும் போட்டியிட்டார். இதற்காக தேர்தல் நடைபெற்ற நாளில், நவகார்க் வாக்குச்சாவடிக்கு தயால்தாஸ் சென்றார்.

தேங்காய் உடைத்தார்

தேங்காய் உடைத்தார்

அங்கிருந்த வாக்குப்பதிவு மிஷின் முன்பு நின்று கொண்டு முதலில் சாமி கும்பிட்டார். அதன்பிறகு தேங்காய் உடைத்து பூஜையை ஆரம்பித்தார். இறுதியாக வாக்கு சேகரிக்கும் பெட்டியை தொட்டு கும்பிட்டார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாக ஆரம்பித்ததோடு சர்ச்சையும் சேர்ந்தே எழுந்தது.

படுதோல்வி

படுதோல்வி

எனவே வாக்குச் சாவடியில் தயால்தாஸ் பூஜை நடத்தியது தொடர்பாக விளக்கம் கேட்டு, தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீசும் அனுப்பி இருந்தது. ஆனால் இவ்வளவு செய்தும் தயால்தாஸ் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துவிட்டார்.

English summary
Chhattisgarh Minister Dayaldas Baghel's defeat in Election. Few days back, he performs Puja inside Polling booth and gets EC Notice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X