For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்தீஸ்கரில் "ரபேல்" பெயரில் கிராமம்.. கேலி பேச்சுகளால் நொந்துகிடக்கும் கிராம மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 'ரபேல்' பெயரில் ஒரு கிராமம்- வீடியோ

    ராய்பூர்: ஊரெல்லாம் ரபேல் விமான சர்ச்சை பூதாகரமாக இருக்கும் நிலையில், "ரபேல்" என்ற பெயரில் சத்தீஸ்கரில் கிராமம் இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பிரெஞ்சின் டசால்ட் நிறுவனம் "ரபேல்" என்ற பெயரில் போர் விமானத்தை தயாரித்து தர இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இதனால் இன்று "ரபேல்" என்ற வார்த்தை இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டது. இந்த "ரபேல்" பெயரை வைத்து மீம்ஸ் மற்றும் ஜோக்குகள் தீயாக பரவி வருகின்றன.

    யார் தருவார் அரியாசனம்?.. காளி எடப்பாடி vs தூக்குதுரை ஸ்டாலின்.. வெல்லப் போவது யாரப்பா! யார் தருவார் அரியாசனம்?.. காளி எடப்பாடி vs தூக்குதுரை ஸ்டாலின்.. வெல்லப் போவது யாரப்பா!

    நொந்துபோன மக்கள்

    நொந்துபோன மக்கள்

    இது ஒருபுறம் எனில் சத்தீஸ்கரில் மகசாமுண்ட் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் 'ரபேல்' என்ற பெயரில் ஒரு கிராமம் இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. இந்த கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ரபேல் சர்ச்சையால் நொந்துபோன இந்த கிராமத்து மக்கள் தங்கள் ஊர் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    பெயரைமாற்றணும்

    பெயரைமாற்றணும்

    இது தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த 83 வயது முதியவர் தரம் சிங் கூறுகையில், "எங்கள் கிராமத்தை எல்லோரும் கேலி செய்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரபேல் விவகாரத்தை தீர விசாரிக்கும். எனவே ஊர் பெயர் இன்னும் பொதுமக்களிடம் கெட்டபெயராக மாறும். எனவே எங்கள் கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்.

    தண்ணீர் இல்லை

    தண்ணீர் இல்லை

    இதுவரை எங்கள் ரபேல் கிராமம் பக்கத்து மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரியாமல் இருந்தது. ரபேல் ஊழல் பிரச்னையால் இப்போது பக்கத்து மாநிலம் வரை தெரிந்துள்ளது. எங்கள் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.

    பாஜகவினர் வந்தார்கள்

    பாஜகவினர் வந்தார்கள்

    பொதுவாக கிராமத்தினர் மீது அரசியல்வாதிகளுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும். ஆனால் அப்படி எங்கள் கிராமத்திற்கு வர வேண்டும் என்று எந்த அரசியல்வாதிக்கும் அக்கறை இல்லை. சில நாட்களுக்கு முன்பு பாஜக தொண்டர்கள் எங்கள் கிராமத்துக்கு வந்தனர். ஆனால் அவர்கள் சாதாரண அடிமட்ட தொண்டர்கள். எனவே யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் ஊர் பெயரை மாற்ற வேண்டும்" என்றார்.

    English summary
    Chhattisgarh one village name is Rafel , Village residents have requested for a name change
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X