For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா.. அமெரிக்கா செல்கிறார்

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா- வீடியோ

    டெல்லி : மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சுப்ரமணியன் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக அமெரிக்காவின் பீட்டர்சன் பன்னாட்டு பொருளியல் கழகத்திலும், உலகளாவிய மேம்பாட்டு மையத்தின் மூத்த ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.

    Chief Economic Advisor Aravind Subramaniyan Resigns his Post

    இவர் சமீபத்தில், ஜிஎஸ்டி வரி விகிதத்தில் உள்ள வேறுபாடுகள் கலையப்பட வேண்டும் என்றும், மின் துறை , கட்டுமானத்துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் டீசல், பெட்ரோல் விலை குறையும் என்றும் மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்து இருந்தார்.

    இதுகுறித்துப் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல் டீசல் விலையக் குறைக்க முடியாது என்றும், ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முடியாது என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்கா ராஜினாமா செய்துள்ளதாகவும், மீண்டும் அவர் அமெரிக்காவிற்கு திரும்பி செல்ல உள்ளதாகவும், அருண்ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அரவிந்த் சுப்ரமணியனின் ராஜினாமா வருத்தம் அளிப்பதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

    English summary
    Chief Econamic Advisor Aravind Subramaniyan Resigns his Post. FM Arun Jaitley had said that, it makes him sad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X