For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூப்பர் முதல்வர்.. புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு ஒரு வருட சம்பளத்தை தருகிறார் நவீன் பட்நாயக்!

Google Oneindia Tamil News

புவனேஷ்வர்: ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு தனது ஓர் ஆண்டு நிதியை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அப்படியே வழங்குகிறார்.

வங்கக்கடலில் உருவான ஃபனி புயல், தமிழகம் ஆந்திரா என போக்கு காட்டி கடைசியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலத்தை தாக்கியது. இதில், பூரி, கோபால்பூர் உள்ளிட்ட பல பகுதிகள் சேதமடைந்தன.

Chief Minister Naveen patnayak giving his one year salary for Fani hits Odisha

மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றியடித்த காற்றால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. புயலால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஃபனி ஆடிச்சென்ற பேயாட்டத்தில் இருந்து இன்னும் அம்மாநிலத்தின் பல பகுதிகள் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஒடிசாவுக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

10 கோடி கார்த்தி சிதம்பரத்திற்கு பெரிதல்ல.. வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி, உச்சநீதிமன்றம் கருத்து10 கோடி கார்த்தி சிதம்பரத்திற்கு பெரிதல்ல.. வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி, உச்சநீதிமன்றம் கருத்து

இந்நிலையில் மாநில முதல்வர் நவீன்பட்நாயக் தனது ஒரு ஆண்டு சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிட முடிவு செய்துள்ளார். ஒடிசாவில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்ததாகவும், சர்வதேச தரத்திலான சீரமைப்பு பணிகள் நடக்கவுள்ளதாகவும் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

English summary
Odisha Chief Minister Naveen patnayak giving his one year salary for Chief minister relief fund for fani cyclone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X