For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இறுதி வரை நம்பிய ரகுபர் தாஸ்.. படுதோல்வி.. ஜார்க்கண்ட் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா

Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியில் இருந்து ரகுபர் தாஸ் ராஜினாமா செய்தார்.

ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிட்டது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கூட்டணி மொத்தம் உள்ள 81 இடங்களில் 47 இடங்களை வென்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.

Chief Minister Raghubar Das tenders his resignation from the post to Governor Draupadi Murmu in Ranchi

ஜார்க்கண்ட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக 25 இடங்களில மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது. ஜேவிஎம்பி கட்சி 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யு 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பிற கட்சிகள் நான்கு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பாஜகவின் மூத்த தலைவரான ரகுபர் தாஸ் ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். ரகுபர் தாஸ் தனது ராஜினாமா கடிதத்தை ராஞ்சியில் உள்ள ராஜ்பவன் சென்று ஆளுநர் தரும்படி முர்முவிடம் அளித்தார்.

ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல.. நச்சுன்னு 4 காரணம்.. இப்படித்தான் ஜார்கண்டில் கோட்டை விட்டது பாஜகஒன்னு இல்ல, ரெண்டு இல்ல.. நச்சுன்னு 4 காரணம்.. இப்படித்தான் ஜார்கண்டில் கோட்டை விட்டது பாஜக

இதனிடையே ரகுபர் தாஸ் சுயேட்சை வேட்பாளர் சர்யு ராயிடம் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜாம்ஜெட்பூர் கிழக்கு தொகுதியில் தோல்வி அடைந்தார். தங்கள் கட்சி ஜெயிக்கும் இன்று இறுதிவரை நம்பிக்கொண்டிருந்த ரகுபர் தாஸ் கடைசியில் அவரும் தோல்வி அடைந்திருப்பது பாஜகவினரிடையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதனிடைய காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இவர் தான் போட்டியிட்ட டும்கா மற்றும் பர்கியாட் ஆகிய தொகுதியில் வெற்றி பெற்றார்.

English summary
Jharkhand Assembly Elections 2019: Chief Minister Raghubar Das tenders his resignation from the post to Governor Draupadi Murmu, at Raj Bhavan in Ranchi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X