For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தை கடத்தல் வதந்தி: கர்நாடகாவில் ஐடி பணியாளர் படுகொலை.. 4 பேர் படுகாயம்.. 32 பேர் கைது

கர்நாடகாவில் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி 4 பேரை பொதுமக்கள் மோசமாக தாக்கியுள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூரில்: கர்நாடகாவில் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி 4 பேரை பொதுமக்கள் மோசமாக தாக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட விபத்தில் ஐடி பணியாளர் ஒருவர் பலியாகி உள்ளார்.

உங்கள் குழந்தைகளை ஒரு கும்பல் கடத்துகிறது, பாதுகாப்பாக இருங்கள் என்று பரவியது.மர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்தி விற்பதாக வெளியான இந்த வாட்ஸ் ஆப் வதந்தி காரணமாக கடந்த 5 மாதங்களில் மட்டும் 31 பேர் இந்தியா முழுக்க கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Child Trafficking Rumor: An Innocent Techie lynched to death by people in Karnataka

தமிழகத்தில் வதந்தி காரணமாக திருவண்ணாமலையில் ருக்மணி என்ற மூதாட்டியும், திருவள்ளூரில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபரும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹராஷ்டிரா, மேற்கு வங்கம், அசாம், ராஜஸ்தான் , ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் எல்லா இத பொய்யான தகவல் சென்றுள்ளது.

இந்த நிலையில் இந்த வதந்தி காரணமாக கர்நாடகாவில் பிடார் பகுதியில் 4 பேரை பொதுமக்கள் மோசமாக தாக்கியுள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த இவர்கள் தெருவில் பார்த்த ஏழை குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்ததற்காக 50 பேர் கொண்ட கும்பலால் மோசமாக தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதோடு காரில் சென்றவர்கள் விரட்டு விரட்டு தாக்கியுள்ளனர். இதனால் அந்த கார் பாலத்தின் சுவர் மீது மோதி, கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த ஐடி பணியாளர் முகமது அசாம் பலியாகி உள்ளார். அவரது நண்பர்கள், 4 பேர் மோசமாக காயமடைந்து இருக்கிறார்கள்.

இந்த கொலையில் ஈடுபட்ட மக்கள் யார் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

English summary
Child Trafficking Rumor: An Innocent Techie lynched to death by people in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X