For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழந்தைகள் தினம்.. வீர தீர செயல் புரிந்த குழந்தைகளுக்கு குடியரசு தலைவர் விருது

வீரதீர செயல்புரிந்த, பல்துறைகளில் சிறப்பாகச் செயல்பட்ட குழந்தைகளுக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கினார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெல்லி : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வீர தீர செயல்புரிந்த, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகள் வழங்கி கெளரவித்தார்.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ம் தேதியை இந்திய அரசு குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறது. இந்நாளில் நாடு முழுவதிலும் இருந்து வீர தீர செயல், பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகளுக்கு குடியரசுத்தலைவர் விருதுகள் வழங்குவது வழக்கம்.

 Children from various States received National and State-level awards for achievements and Bravery Works

அந்த வகையில், இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 2017ம் ஆண்டிற்கான வீர,தீர செயல் புரிந்த குழந்தைகளுக்கும் பல்வேறு துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்ட குழந்தைகளுக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகள் வழங்கி கெளரவித்தார். இந்த விழா குடியரசுத்தலைவர் மாளிகையான ராஷ்ட்ரபதி பவனில் நடந்தது.

இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 16 குழந்தைகளுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த ஆகாஷ் மனோஜ் என்கிற மாணவருக்கும், கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்வஸ்திக் பத்மா என்கிற மாணவருக்கும் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்பட்டது.

காஷ்மீரைச் சேர்ந்த மாண்வி ஜாய்ரா வாசிம் என்பவருக்கு கலையில் சிறந்து வழங்கியதற்காகவும் விருது வழங்கப்பட்டது. மேலும் வீர தீர செயல் புரிந்ததற்காக கர்நாடகாவைச் சேர்ந்த வைஷாக் என்கிற சிறுவனுக்கும், நிதின் என்கிற சிறுவனுக்கும் வழங்கப்பட்டது. இதில் வைஷாக் என்கிற சிறுவன் தனது உறவினர் ஒருவரைத் தாக்க வந்த மலைப்பாம்பிடம் போராடி அவரைக் காப்பாற்றியதற்காகவும், நிதினுக்கு பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட தனது தங்கைக்கு உரிய நேரத்தில் முதலுதவி செய்து காப்பாற்றியதற்காகவும் வழங்கப்பட்டது.

தீக்‌ஷிதா மற்றும் அம்பிகா சகோதரிகளுக்கு கழிவு நீர் குழாயில் மாட்டிக் கொண்ட சிறுவனைக் காப்பாற்றியதற்கும், ஜூனைரா ஹரம் என்கிற மாணவிக்கு தண்ணீர் தொட்டியில் விழுந்தவரைக் காப்பாற்றியதற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது. இவர்களுக்கு விருதும், 10000 ரூபாய் ரொக்கமும் பட்டயமும் பரிசாக வழங்கப்பட்டது.

English summary
Children from various States received National and State-level awards for achievements in different fields and Bravery awards also given at the Children’s Day celebrations on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X