For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேரு பிறந்தநாளையொட்டி குழந்தைகளிடையே மத்திய அரசின் தேசிய சிறார் தூய்மை திட்டம் தொடக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசு தேசிய சிறார் தூய்மை திட்டத்தை இன்று தொடங்கியுள்ளது.

மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதியன்று தேசிய அளவில் தூய்மைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்றுள்ள வருகின்றனர்.

இந்த நிலையில் குழந்தைகள் தினமான நேருவின் 125வது பிறந்த நாளான இன்று தேசிய அளவிலான சிறார் தூய்மைத் திட்டம் (நேஷனல் பால் ஸ்வாச்சா) இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய சிறார் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி இதனை தொடங்கி வைத்தார்.

Children’s Day: Maneka Gandhi Launches National Bal Swachhta Mission

இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய அவர், தேசிய தூய்மைத் திட்டத்தில் சிறார்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இவர்கள்தான் தூய்மை திட்டத்தின் தூதர்களாக தங்கள்து வீடு, பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் செயல்பட முடியும்" என்றார்.

மேலும் சிறார்களுக்கு அவர்களுக்கான புரிதல் முறைகளின் வழியே தூய்மை குறித்து கற்பிக்க வேண்டியதும் அவசியம் என்றார்.

தேசிய சிறார் தூய்மைத் திட்டமானது இன்று முதல் வரும் 19-ந் தேதி வரை கடைபிடிக்கப்பட இருக்கிறது.

English summary
Recalling Nehru’s love towards children, Modi government had organised to launch the nationwide cleanliness drive to schools in the name of “Bal Swachhta Mission,” to mark celebration of Nehru’s 125th birth anniversary as well as Children’s day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X