For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 1800 வீரர்களை டோக்லாம் எல்லையில் குவித்த சீனா

டோக்லாமில் மீண்டும் சீனா ராணுவத்தினர் குவிக்கபட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பூடான் எல்லையில் டோக்லாமில் உறைய வைக்கும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் 1800 வீரர்களை சீனா திடீரென குவித்திருப்பதால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா- பூடான் -சீனா நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பீடபூமியில் சீனா தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. டோக்லாம் பூடானுக்கு சொந்தமானதாக இருந்தாலும் அதன் பாதுகாப்பு பொறுப்பில் இந்திய ராணுவமே உள்ளது.

China again deploys 1800 troops in Doklam

இதை பொருட்படுத்தாமல் அண்மைக் காலமாக சீனா ராணுவத்தினர் முரட்டுத்தனமாக அத்துமீறுவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நமது ராணுவ வீரர்களும் டோக்லாம் எல்லையில் அதிக எல்லையில் குவிக்கப்பட்டனர்.

இதனால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் டோக்லாம் பீடபூமி போர்க்களமாக உருமாறிக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தையில் இந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் திடீரென கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் 1800 வீரர்களை டோக்லாமில் சீனா குவித்துள்ளது. அத்துடன் அங்கு ஹெலிபேடு தளங்களையும் சீனா அமைத்துள்ளது. சீனாவின் இந்த திடீர் அத்துமீறலால் டோக்லாமில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

English summary
1,800 Chinese troops have now established a permanent presence in the Doklam area, near the Sikkim-Bhutan-Tibet trijunction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X