For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன ராணுவ தாக்குதலில்.. வீர மரணம் எய்திய இந்திய வீரர் பழனி.. ராமநாதபுரத்துக்காரர்!

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: சீன ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் 3 பேரை கல்லால் அடித்து கொன்றுள்ளனர். வீர மரணம் அடைந்த 3 ராணுவ வீரரகளில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனியும் ஒருவர் ஆவார்.

Recommended Video

    India China Border Fight வீர மரணம் எய்தினார் தமிழக வீரர் பழனி

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் லடாக் எல்லையில் பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை உள்ளது. இந்த எல்லை பிரச்சனை இந்தியா லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்த பின்னர் அதிகரித்தது.

    china army killed 3 indian soldiers include Ramanathapuram army man palani

    குறிப்பாக லடாக் பகுதியில் இந்தியா பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகளை செய்ததுதான் சீனா ஆத்திரம் அதிகரித்து அத்துமீறலை தொடங்கியது. அடிக்கடி எல்லை தாண்டி வருவது , இந்திய வீரர்கள் மீது கற்களை வீசுவது போன்ற காரியங்களை செய்து வந்தது. இதனால் இரு தரப்புக்கும் மோதலும், கைகலப்பும் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது.

    இந்தியாதான் முதலில் எல்லை தாண்டியது.. அவர்கள்தான் தாக்கியது.. சீனாவின் முரணான கருத்து.. பின்னணி!இந்தியாதான் முதலில் எல்லை தாண்டியது.. அவர்கள்தான் தாக்கியது.. சீனாவின் முரணான கருத்து.. பின்னணி!

    china army killed 3 indian soldiers include Ramanathapuram army man palani

    கடந்த சில வாரங்களாக லடாக் எல்லையில் நிலைமை மோசமானது. இரு நாடுகளும் எல்லையில் வீரர்களை குவித்தன. பேச்சுவார்த்தை நடத்தியதால் பதற்றம் தணிந்து இருந்தது. இந்நிலையில் லடாக் எல்லையில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் நேற்று இரவு ராணுவ அதிகாரி உள்பட மூன்று இந்திய ராணுவ வீரர்களை கல்லால் தாக்கி கொன்றனர். வீரமரணம் அடைந்த இந்த 3 பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரரும் சீன வீரர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். 22 வருடங்களாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்த பழனி. ஹவில்தாராக இருந்தார். பழனிக்கு சொந்த ஊர் திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமம் ஆகும்.

    English summary
    During de-escalation process in Galwan Valley, a violent face-off took place last night with casualties. The loss of lives on Indian side includes an officer & 2 soldiers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X