For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2015-ல் 'சீனா'வின் வேட்பாளராக இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ராஜபக்சே... திடுக் தகவல்

ராஜபக்சே தேர்தலில் வெல்ல பணத்தை அள்ளி இறைத்த சீனா.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    2015 தேர்தலில் சீனாவின் சார்பாக போட்டியிட்ட ராஜபக்சே- வீடியோ

    கொழும்பு: 2015-ம் ஆண்டு இலங்கை அதிபர் தேர்தலில் சீனாவின் வேட்பாளராக ராஜபக்சே போட்டியிட்டார் என திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

    இலங்கையில் 2015-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது ராஜபக்சே இந்தியா ஆதரிக்கவில்லை. மைத்ரிபால சிறிசேனவை இந்தியா ஆதரித்தது.

    China Funds for Rajapaksa Election campaign in 2015: Newyork Times

    இதனால் ராஜபக்சே சீனாவின் உதவியை நாடினார். இப்போது ராஜபக்சேவுக்கு சீனா எப்படியெல்லாம் தேர்தல் செலவுகளுக்காக பணத்தை வாரி இறைத்தது; 2005-ம் ஆண்டு அதிபரான மகிந்த ராஜபக்சே அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவிடம் பெருமளவு கடன் பெற்று எப்படி கொடுத்தார் என்கிற விவரங்களுடன் நீண்ட ஆய்வு கட்டுரையை How China Got Sri Lanka to Cough Up a Port என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் ஏடு வெளியிட்டுள்ளது.

    அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய விவரங்கள்:

    • ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் சீனா இலங்கைக்கு பெருமளவு கடன் வழங்கியது. இதன் அடிப்படையிலேயே அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா பெற்றது.
    • 2015 இலங்கை அதிபர் தேர்தலில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார் மகிந்த ராஜபக்சே. அப்போது ராஜபக்சேவுக்கு தேர்தல் செலவுகளை அள்ளி வீசியது சீனா.
    • ராஜபக்சேவின் தேர்தல் பிரசாரத்துக்காக சீனாவின் துறைமுக கட்டுமான நிறுவன கணக்கில் இருந்து 7.6 மில்லியன் டாலர் நிதி வழங்கப்பட்டது.
    • வாக்குப் பதிவுக்கு சற்று முன்னதாக 3.7 மில்லியன் டாலருக்கான செக்கும் சீனா தரப்பில் இருந்து வழங்கப்பட்டிருக்கிறது.
    • ராஜபக்சேவின் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்திய சீனா டி சர்ட், போஸ்டர் உள்ளிட்டவைகளுக்கு 6,7800 டாலர்கள் செலவிட்டது.
    • பெண்களுக்கான சேலைகள் உட்பட வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க 2,97,000 டாலர்களை சீனா செலவிட்டது.
    • ராஜபக்சே வசித்த அதிபர் மாளிகையான அலரி மாளிகைக்கு 1.7 மில்லியன் டாலருக்கான 2 காசோலைகளை கொடுத்தது சீனா.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Newyork times expose that China Financed directly to Rajapaksa campaign in 2015 Presidential election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X