For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100+ டென்ட்கள்.. தயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா.. பெரும் பதற்றம்!

இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து வீரர்களை குவித்து வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

லடாக்: இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து வீரர்களை குவித்து வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் அங்கு இப்படி நடந்தது இல்லை என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    Ladakh எல்லையில் வீரர்களை இறக்கிய China.. பெரும் பதற்றம்| Oneindia Tamil

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் வலுக்க தொடங்கி உள்ளது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. முக்கியமாக லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.

    கடந்த 4 மாதங்களில் மட்டும் லடாக் எல்லையில் சீனா 140 முறை அத்துமீறி உள்ளது.முக்கியமாக அங்கு இருக்கும் பாங்காங் டிசோ பகுதியில் உள்ள நதியில் தொடர்ந்து சீனா அத்து மீறி வருகிறது.

    அதிநவீன லேசர் ஆயுதம்.. நடுக்கடலில் நடந்த சீக்ரெட் சோதனை வெற்றி.. ஆட்டத்திற்கு தயாராகும் அமெரிக்கா!அதிநவீன லேசர் ஆயுதம்.. நடுக்கடலில் நடந்த சீக்ரெட் சோதனை வெற்றி.. ஆட்டத்திற்கு தயாராகும் அமெரிக்கா!

    படைகள் குவிப்பு

    படைகள் குவிப்பு

    இந்த நிலையில் இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து வீரர்களை குவித்து வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் அங்கு இப்படி நடந்தது இல்லை என்று கூறுகிறார்கள். பாங்காங் டிசோ பகுதியில் தற்போது சீனா வீரர்கள் தங்கும் டெண்ட்களை அமைத்துள்ளது. 100 டென்ட் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் அதிகமாக வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதி நவீன ஆயுதங்களை சீனா அங்கு குவித்துள்ளது.

    மோசமான சிக்னல்

    மோசமான சிக்னல்

    சீனா போருக்கு தயார் ஆவதற்கான அறிகுறி இது என்று கூறுகிறார்கள். சீனாவின் இந்த செயல் மேலும் பிரச்சனை ஏற்படுத்தும் என்கிறார்கள். அதோடு பாங்காங் டிசோ பகுதியில் சீனா தற்போது பங்கர்கள் எனப்படும் பதுங்கு குழிகளை அமைத்து வருகிறது. 100க்கும் அதிகமான பதுங்கு குழிகளை சீனா அமைத்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாக நடந்து வருகிறது.

    4 இடங்களில் படைகள்

    4 இடங்களில் படைகள்

    அதேபோல் இந்தியா - சீனா எல்லையில் மொத்தம் 4 முக்கியமான இடங்களுக்கு சீனா குறி வைத்து இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இந்த 4 இடங்களில்தான் சீனா தொடர்ந்து அத்து மீறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமாக பாங்கொங் திசோ, டிரிக் ஹைட்ஸ், புர்ட்ஸ் மற்றும் டிச்சு ஆகிய நான்கு இடங்களில்தான் அதிகமாக சீனா அத்து மீறி உள்ளது.

    சீனா லடாக் குறி

    சீனா லடாக் குறி

    சீனா தொடர்ந்து லடாக் மீதுதான் குறி வைத்து வருகிறது. இதனால் இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவனே எல்லையில் சோதனை நடத்தினார். லடாக்கில் லே அருகே இருக்கும் சீன எல்லையில் சோதனை செய்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் பகுதியில் இந்தியாவும் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை வெடிக்கலாம் என்கிறார்கள்.

    ஏற்கனவே சண்டை

    ஏற்கனவே சண்டை

    ஏற்கனவே கடந்த வாரம் சிக்கிம் எல்லையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே சண்டை வந்தது.சிக்கிம் பகுதியில் இருக்கும் நகு லா பகுதியில் சண்டை வந்துள்ளது. கடந்த 10ம் தேதி இந்த சண்டை இரண்டு நாட்டிற்குள் இடையில் வந்தது. அதேபோல் கடந்த 5ம் தேதி இந்தியாவின் லடாக் பகுதியில் இருக்கும் விமான எல்லைக்குள் சீன போர் ஹெலிகாப்டர்கள் இரண்டு கடந்த சில தினங்கள் முன் எல்லை மீறி உள்ளது.

    English summary
    China made 100+ tents in Ladakh border, which constructs bunkers creates new tension.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X