லடாக்கை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் வாலாட்ட நினைக்கும் சீனா- எல்லையில் புதிய சாலையால் டென்ஷன்
சிம்லா: லடாக் எல்லையில் ஊடுருவ முயன்ற சீனா தற்போது இமாச்சல பிரதேசத்துக்கும் குறிவைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இமாச்சல பிரதேசத்தில் எல்லையில் புதிய சாலைகளை அமைப்பதில் சீனா மும்முரமாக ஈடுபட்டு வருகிறதாம்.
இந்தியாவுடனான அத்தனை எல்லைகளிலும் தொல்லை கொடுத்து வருகிறது சீனா. லடாக்கின் கிழக்கில் ஊடுருவ முயன்ற சீனாவுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
அது அவங்க பிரச்சனை.. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா அதிரடி நிலைப்பாடு.. பாக்.கிற்கு மேலும் சிக்கல்

பின்வாங்க ஒப்புதல்
இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா ராணுவத்தினர் 40 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இருதரப்பு இடையே தொடர் பேச்சுவார்த்தைகள் பல்வேறு நிலைகளில் நடைபெறுகின்றன. எல்லையில் இருதரப்பும் படைகளை பின்வாங்க ஒப்புக் கொண்டன.

சீனாவுடன் பேச்சுவார்த்தை
ஆனால் சீனா எல்லைகளில் நிலைகளை மாற்றி படைகளை குவிப்பதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இருப்பினும் சீனாவுடன் மத்திய அரசு ராணுவம், ராஜதந்திர முறைகளில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.

இமாச்சல் எல்லையில் சாலைகள்
இந்த நிலையில் இமச்சல பிரதேச எல்லையில் குடைச்சல் கொடுக்க களம் இறங்கியுள்ளது சீனா. எல்லையில் சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு சீனா புதிய சாலைகளை அமைத்து வருகிறதாம். இதனால் எல்லையில் ராணுவம் கூடுதலாக குவிக்கப்பட்டு லடாக் பிராந்தியத்தைப் போல பதற்றமாக்க சீனா முயற்சிக்கிறது.

இமாச்சல் பதற்றம்
லடாக்கின் கால்வின் பள்ளத்தாக்கை சர்ச்சைக்குரியதாக்கிய போது இமாச்சல பிரதேசத்தின் மொராங் பள்ளத்தாக்கு, கிமோகுல் கணவாய் பகுதிகளில் சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போடுகிறது சீனா. இதனால் இமாச்சல் எல்லையிலும் தற்போது பதற்றமான நிலை உருவாகி உள்ளது.