For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஸ்ஸாம், ஒடிஷாவுக்கு குறி-மியான்மர் எல்லையில் நவீன ராடார்களுடன் காத்திருக்கும் சீனாவின் கழுகு கண்கள்

Google Oneindia Tamil News

குவஹாத்தி: இந்தியா மீதான தாக்குதல்களுக்கு மியான்மர் வான்வெளியைப் பயன்படுத்தும் வகையிலான வியூகங்களை சீனா வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மியான்மர் எல்லையில் இருந்து அதிநவீன ராடார் கருவிகள் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை சீனா கண்காணித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீற் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கால்வன் பள்ளத்தாக்கில் இதுபோல மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் தீரமுடன் போரிட்டு முறியடித்தனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லைகளிலும் சீனா குடைச்சல் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரும் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள், பயிற்சிகளைக் கொண்டு தாக்குதல்களை நடத்தவும் சீனா தூண்டிவிட்டு வருகிறது. அண்மையில் மியான்மர் எல்லையில் வடகிழக்கு மாநில பயங்கரவாதிகளுக்கு கடத்தப்பட இருந்த அதிநவீன சீனா தயாரிப்பு ஆயுதங்கள் பெருமளவில் சிக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஜார்ஜ் பிளாய்ட்.. கருப்பின வாலிபரை துளைத்த போலீஸ் குண்டுகள்.. அமெரிக்காவில் வெடித்த வன்முறை மற்றொரு ஜார்ஜ் பிளாய்ட்.. கருப்பின வாலிபரை துளைத்த போலீஸ் குண்டுகள்.. அமெரிக்காவில் வெடித்த வன்முறை

மியான்மர் எல்லையில் ரேடார்கள்

மியான்மர் எல்லையில் ரேடார்கள்

இதனிடையே மியான்மர் எல்லையை மையமாக வைத்து இந்தியாவுக்கு எதிராக சீனா வியூகம் வகுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மியான்மர் எல்லையில் இருந்து 3 கி.மீ தொலைவில் கடந்த் ஆண்டு மார்ச் மாதம் சீனா நவீன ரேடார்களை நிறுவி இருக்கிறது.

அஸ்ஸாம், ஒடிஷாவுக்கு குறி

அஸ்ஸாம், ஒடிஷாவுக்கு குறி

இந்த ரேடார்கள் இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த 2 இடங்களை குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஒன்று அஸ்ஸாமி தேஸ்பூர் விமான தளம். 2-வது ஒடிஷாவில் வங்க கடலில் உள்ள ஏவுகணை சோதனை தளமான அப்துல்கலாம் தீவுகள். இந்த இரண்டையும் வேவுபார்த்து குறிவைக்கும் வகையில் சீனாவின் ராடார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதை ராணுவத்தின் செயற்கைக்கோள் படங்களும் உறுதி செய்திருக்கின்றன.

வடகிழக்கு மாநிலங்களுக்கு குறி

வடகிழக்கு மாநிலங்களுக்கு குறி

சீனாவைப் பொறுத்தவரை வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிப்பதும் அதன்நீண்டகால செயல் திட்டங்களில் ஒன்று. பூட்டானின் டோக்லாம் பீடபூமியை சீனா கைப்பற்ற முயற்சித்ததும் இதன் ஒரு பகுதிதான். ஏனெனில் டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்றினால் அங்கிருந்து வடகிழக்கு இந்தியாவையும் இந்தியாவின் இதர பகுதிகளையும் இணைக்கும் தொடர்பை எளிதாக துண்டித்துவிட முடியும். இதனை உணர்ந்துதான் நமது ராணுவமும் 77 நாட்கள் தீரமுடன் சீனாவின் டோக்லாம் ஆக்கிரமிப்பை எதிர்த்தது.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு

இதேபோல் இன்னமும் அருணாசலப் பிரதேசத்தை தமது நாட்டின் ஒருபகுதியாக உரிமை கொண்டாடி வருகிறது சீனா. நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம் தீவிரவாதிகள் மியான்மர் எல்லையில் முகாம்களை அமைத்துக் கொண்டு சீனாவில் ஆயுத பயிற்சி பெறுகின்றனர். அப்படி சீனாவிடம் ஆயுத பயிற்சி பெற்ற தீவிரவாதிகள்தான் அண்மையில் மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி இருந்ததும் அம்பலமானது. ஏற்கனவே மியான்மர் எல்லைக்குள் நுழைந்து சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம்ம் அழித்திருந்தது.

மியான்மர் வான்வெளியில் இருந்து தாக்குதல்?

மியான்மர் வான்வெளியில் இருந்து தாக்குதல்?

தற்போது மியான்மர் வான்வெளியை பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னோட்டமாக எல்லையில் ராடார்களை நிறுவி வேவுவேலையில் முமுரமாக இருக்கிறது சீனா. லடாக், சிக்கிம், இமாச்சல பிரதேசம், அருணாசல பிரதேசம் வரிசையில் மியான்மர் எல்லையையும் போர் பதற்ற பகுதியாக மாற்ற சீனா முயற்சிக்கிறது என்பது பாதுகாப்பு வல்லுநர்களின் கருத்து.

English summary
According to the Media Reports, China may use Myanmar’s Airspace against India?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X