For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது என்னப்பா அக்கிரமம்? அருணாசலபிரதேசத்துக்கு அமித்ஷா போவதால் சீனாவுக்கு காண்டாம்

Google Oneindia Tamil News

இடாநகர்: உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாசலபிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளதற்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

நமது நாட்டின் அங்கமான அருணாசலப் பிரதேசத்தை தாம் ஆக்கிரமித்திருக்கும் தென்திபெத்தின் ஒரு பகுதி என கூறி வருகிறது சீனா. இதனை இந்தியா எப்போதும் நிராகரித்து வந்துள்ளது.

China objects to Amit Shahs visit to Arunachal Pradesh

மத்திய அமைச்சர்கள் அருணாசலபிரதேசத்துக்கு பயணம் செய்தாலே சீனா அலறுகிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் அருணாசலப் பிரதேச பயணங்களுக்கும் சீனா ஆட்சேபனை தெரிவித்திருந்தது.

தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அருணாசலப் பிரதேசத்துக்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அருணாசலப் பிரதேச மாநிலம் உருவான 34-வது ஆண்டு நிகழ்ச்சியில் அமித்ஷா இன்று பங்கேற்றார்.

மேலும் தொழிற்சாலைகள், சாலை திட்டங்கள் ஆகியவற்றையும் அமித்ஷா அங்கு தொடங்கி வைத்தார். இதற்குதான் ஆட்சேபம் தெரிவிப்பதாக வழக்கம் போல கூறியிருக்கிறது சீனா.

இந்தியாவும் சீனாவும் எல்லை பிரச்சனை தொடர்பாக இதுவரை 22 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளன. ஆனால் இதுவரை எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
China today objected to Home Minister Amit Shah's visit to Arunachal Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X