For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்சய் சீனில் சீனா செய்த வேலை... இந்திய ராணுவத்துக்கு நெருக்கடி .. ஷாக் தகவல்

Google Oneindia Tamil News

லடாக் :சீன மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) கடந்த ஒன்பது மாதங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு லடாக் பகுதிகளில் உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அங்கு புதிதாக ஹெலிபேட் தளத்தை அமைத்துள்ளது . இதனால் இந்தியாவும் அங்கு இதேபோன்ற உள்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

திபெத் மற்றும் கிழக்கு துர்கெஸ்தானிலும் சின்ஜியாங்), குறிப்பாக இந்திய எல்லைகளிலும் ராணுவத்திற்கான வசதிகளை உயர்த்தி வந்துள்ளது என்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சீன ராணுவ வீரர்கள் ஆக்கிரமிப்பதை தட்டிக்கேட்ட இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜுன் மாதத்திற்கு பிறகு கிழக்கு லடாக்கில் சீனா தனது இராணுவத்திற்கு தேவையான வசதிகளை அதிகரித்து வருகிறது. இவை செயற்கைகோள் படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகின்றன-

ஏவுகணைகளுடன் சீனா

ஏவுகணைகளுடன் சீனா

இதற்கு முன்னர் லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரை ஏவுகணைகளுடன் காத்திருந்தது சீனா. உண்மையில், செயற்கைக்கோள் படங்களால் சுட்டிக்காட்டப்பட்டபடி, ஆகஸ்ட் 2019 ஆரம்பத்தில் சீனா கிழக்கு லடாக்கில் நுழைவதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் சமாதானங்களால் நுழையவில்லை.‘

ஹெலிபேட் தளம்

ஹெலிபேட் தளம்

இதனிடையே இந்தியா டுடே ஓஎஸ்ஐஎன்டி குழு இப்போது வாஷிங்டனை தளமாகக் கொண்ட செயற்கைக்கோள் பட ஆய்வாளர் கிறிஸ் பிகெர்ஸிடமிருந்து பெறப்பட்ட உயர்-தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்தது. அதில் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் புதிதாக அமைக்கப்பட்ட ஹெலிபேட் அமைத்துள்ளதை கண்டுபிடித்துள்ளது.

லே சாலை அருகே

லே சாலை அருகே

ஹெலிபோர்ட் கட்டுமானம் இந்தியாவின் தௌலத் பேக் ஓல்டி (டிபிஓ) விமானநிலையத்திற்கு எதிரே உள்ளது, மேலும் 16,700 அடி உயரத்தில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஐசி) மற்றும் 255 கிமீ டார்புக்-ஷியோக்-டிபிஓ சாலைக்கு மிக அருகில் உள்ளது.

கட்டமைப்பு உருவாக்கம்

கட்டமைப்பு உருவாக்கம்

மே மாத தொடக்கத்தில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமாக சீன சொல்லி வரும் லேவை டிபிஓவுடன் சாலையை இந்த ஹெலிபேட் தளம் இணைக்கிறது, இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியின் அருகே ஹெலிபேட் தளம் அமைத்துள்ளது சீனா. இந்த ஹெலிபேட் தளம் காரணமாக இந்தியாவும் எல்லைப்பகுதியில் வசதிகளை மேம்படுத்த வேண்டிய நிலைக்கு சீனா தூண்டியுள்ளது.

 அக்சாய் சீனில்

அக்சாய் சீனில்

அக்சய் சினின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய சமீபத்திய செயற்கைக்கோள் படங்களின் படி பார்த்தால், சீன மக்கள் விடுதலை ராணுவம், ஆக்கிரமித்துள்ள பகுதிக்குள் ஒரு ஹெலிபோர்ட்டை உருவாக்கி வருவதை காட்டுகிறது. ஹெலிபோர்ட் பகுதி 2019 ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 2019 அக்டோபரில் செயல்பட தொடங்கியது தெரிகிறது.

English summary
Chinese People’s Liberation Army (PLA) has been continuously upgrading its infrastructure in occupied Eastern Ladakh since the last nine months. Satellite images over PLA’s latest construction of a heliport inside occupied Eastern Ladakh,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X