For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஸ்ஸாமில் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலால் 2,500 பன்றிகள் உயிரிழப்பு- சீனாவில் இருந்து இறக்குமதி

Google Oneindia Tamil News

குவஹாத்தி: அஸ்ஸாமில் அதிகவேகமாக பரவி வரும் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலுக்கு 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் உயிரிழந்துள்ளன. இந்த ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலும் சீனாவில் இருந்துதான் பரவி இருக்கிறது என்றாலும் இதற்கும் கொரோனா வைரஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அம்மாநில கால்நடைத் துறை அமைச்சர் அதுல் போரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் உக்கிரமாக தாக்கி வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 1373 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 42,533 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கொரோனாவைத் தடுக்க நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த லாக்டவுன் மேலும் 2 வாரங்களுக்கு இன்று முதல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

வெறும் 13 மணி நேரம்தான்.. ஒரே இரவில் 39 பேருக்கு கொரோனா.. சத்தமின்றி விழுப்புரத்தில் நடந்த அவலம்! வெறும் 13 மணி நேரம்தான்.. ஒரே இரவில் 39 பேருக்கு கொரோனா.. சத்தமின்றி விழுப்புரத்தில் நடந்த அவலம்!

306 கிராமங்கள், 2500 பன்றிகள்

306 கிராமங்கள், 2500 பன்றிகள்

இந்த நிலையில் அஸ்ஸாமில் இருந்து அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 2,500 பன்றிகள் அடுத்தடுத்து கொத்து கொத்தாக உயிரிழந்துள்ளன. மொத்தம் 306 கிராமங்களில் இப்படி ஒட்டுமொத்தமாக பன்றிகள் உயிரிழந்திருக்கின்றன. இது தொடர்பாக NIHSAD எனப்படும் கால்நடைகளுக்கான நோய் தொடர்பான ஆய்வு மையம் ஆராய்ச்சி நடத்தியது.

ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்

ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்

இதன்முடிவில் அஸ்ஸாமில் பன்றிகள் உயிரிழப்புக்குக் காரணம் ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அஸ்ஸாம் மாநில அரசுக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது பன்றிகளை அழிக்காமல் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலில் இருந்து அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அஸ்ஸாம் மாநில கால்நடைத் துறை அமைச்சர் அதுல் போரா கூறியதாவது:

சீனாவில் இருந்து இறக்குமதி

சீனாவில் இருந்து இறக்குமதி

அஸ்ஸாமில் பன்றிகளின் உயிரிழப்புக்குக் காரணமான ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்துதான் பரவியது. இது அருணாசலப் பிரதேசத்தில் முதலில் தாக்கியது. இதனைத் தொடர்ந்து அஸ்ஸாமில் இப்போது பன்றிகளை கொல்கிறது. இந்த வைரஸுக்கும் கொரோனா வைரஸுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. மனிதர்களின் உடலில் தங்கி இருந்து பன்றிகளை கொல்லக் கூடியது இந்த ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் வைரஸ்.

Recommended Video

    வௌவால்களை ஆராய்ந்த 'பேட் வுமன்'.. உலகமே உற்று நோக்கும் ஒரு பெண்!
    பன்றிகள் நடமாட தடை

    பன்றிகள் நடமாட தடை

    இந்தியாவில் அஸ்ஸாமில்தான் முதன் முறையாக இந்த ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பன்றிகளை அழிக்காமல் அவற்றைப் பாதுக்காக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள பகுத்கள் வரையறை செய்யப்படுவது போல ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் பகுதிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அங்கு பன்றிகளை வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஆரோக்கியமாக இருக்கும் பன்றி இறைச்சியை சாப்பிட எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. இவ்வாறு அதுல் போரா கூறியுள்ளார்.

    English summary
    Assam Animal Husbandry and Veterinary Minister Atul Bora said that African swine fever killed 2,484 pigs in the State.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X