For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆயுதம் முதல் உணவு வரை.. இதுவரை இல்லாத அளவிற்கு ஏற்பாடு.. வின்டர் அட்டாக்கிற்கு தயாராகும் இந்தியா!

Google Oneindia Tamil News

லடாக்: லடாக்கில் அதிக அளவில் இந்தியா படைகளை குவித்து வருகிறது. இதுவரை குவிக்கப்பட்டதை விட அதிக அளவில் படைகள் குவிக்கப்பட்டு ஆயுதங்கள் தொடங்கி உணவு பொட்டலங்கள் வரை எல்லையில் களமிறக்கப்பட்டு வருகிறது.

லடாக்கில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பதற்றம் அதிகரித்து வருகிறது. ராணுவ மற்றும் ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வி அடைந்துவிட்டது. இதனால் எல்லையில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டு நாடுகளும் எல்லையில் தற்போது படைகளை குவித்து வருகிறது. சீனா எல்லையில் இதுவரை 50 ஆயிரம் வீரர்களை குவித்து உள்ளது.

438 இடங்களில் இறங்கிய படை.. லடாக்கிற்கு இடையே சத்தமின்றி உத்தரகாண்டில் வியூகம் வகுத்த இந்தியா.. செம!438 இடங்களில் இறங்கிய படை.. லடாக்கிற்கு இடையே சத்தமின்றி உத்தரகாண்டில் வியூகம் வகுத்த இந்தியா.. செம!

நிலை என்ன

நிலை என்ன

லடாக்கில் அதிக அளவில் இந்தியா படைகளை குவித்து வருகிறது. இதுவரை குவிக்கப்பட்டதை விட அதிக அளவில் படைகள் குவிக்கப்பட்டு ஆயுதங்கள் தொடங்கி உணவு பொட்டலங்கள் வரை எல்லையில் களமிறக்கப்பட்டு வருகிறது. எல்லையில் ஒரு பக்கம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொண்டு சொல்லப்பட்டாலும் இன்னொரு பக்கம் உடனுக்குடன் உணவுகளை சமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வீரர்களுக்கு ஏற்ற டயட் உணவுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பனி காலத்தில் குளிரை தாக்கு பிடிக்கும் அளவிற்கு உணவுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உடைகள்

உடைகள்

அதேபோல் இந்தியாவின் போர் கருவிகள், பீரங்கிகள், துப்பாக்கிகள் குவிக்கப்பட்டு வருகிறது. எல்லா வீரர்களுக்கு துப்பாக்கிகள், அதிக அளவில் தோட்டாக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. டென்ட் அமைக்கும் உபகரணங்கள், குளிர் காலத்தில் தாக்கு பிடிக்கும் டென்ட்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அங்கே சுரங்கம் தோண்டும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

எத்தனை வீரர்கள்

எத்தனை வீரர்கள்

கடந்த இரண்டு நாட்களில் எல்லையில் 35 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். அதிக அளவில் போர் விமானங்கள் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டள்ளது.ரேடார் உபகரணங்கள் புதியதாக பொருத்தப்பட்டு உள்ளது. எல்லை முழுக்க சில இடங்களில் முள் வேலி போடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. போருக்கு தயார் ஆவது போல இந்தியா தயார் ஆகி வருகிறது.

குளிர்கால உடைகள்

குளிர்கால உடைகள்

இதற்காக எல்லையில் சிறப்பு உடைகளை இந்தியா களமிறக்கி வருகிறது. பல ஆயிரம் எண்ணிக்கையில் சிறப்பு உடைகள் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. துப்பாக்கி குண்டுகள் துளைக்காத அதே சமயம் அதிக குளிரை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட உடைகள் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த ஒரு உடையின் விலை 1 லட்சம் ரூபாய். ஒரு வீரருக்கு ஒரு உடை என்று வழங்கப்படும்.

அட்டாக்

அட்டாக்

குளிர் காலத்தில் சீனா எல்லையில் தாக்க வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது. சீனா வின்டர் அட்டாக் நிகழத்த வாய்ப்பு உள்ளது. எல்லையில் 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைகளில் சீனா ஊடுருவ நினைக்கலாம். இங்கே மைனஸ் 50 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவும். இதை சமாளிக்கவே இந்தியா தற்போது தயாராகி வருகிறது.. எல்லையில் சீனாவின் அத்துமீறலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக இந்தியா செயல்படுகிறது என்று ராணுவ தகவல்கள் தெரிவிக்கிறது.

Recommended Video

    Indian Army Ready | China-வின் குளிர்கால தாக்குதல் | Oneindia Tamil

    English summary
    China Standoff in Ladakh: India prepares for long haul in the border before winter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X