For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லடாக்.. சீனாவுக்கு அடுத்து என்ன செக்?.. அஜீத் தோவல் தலைமையில் இரவில் நடந்த ஆலோசனை!

Google Oneindia Tamil News

லடாக்: லடாக் பிரச்சனை தொடர்பாக இந்தியா அடுத்து செய்ய வேண்டிய விஷயங்கள், நடவடிக்கைகள் குறித்து இந்தியா முக்கிய முடிவை எடுக்க உள்ளது. இதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கியமான திட்டங்களை வகுத்துள்ளார்.

Recommended Video

    China விவகாரத்தில் India செய்ததுதான் சரி.. America விடுக்கும் எச்சரிக்கை

    இந்தியா சீனா இடையிலான லடாக் மோதல் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக தொடங்கி உள்ளது. லடாக்கில் மூன்று எல்லை பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்க தொடங்கி உள்ளது.

    அதன்படி டெப்சாங், கல்வான், ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்தும் சீனா படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. இங்கு இருந்து மொத்தம் 2 கிமீ பகுதிக்கு சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி இருக்கிறது.

    அஜித் தோவல்

    அஜித் தோவல்

    இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இடையே நடந்து பேச்சுவார்த்தைதான் இதற்கு காரணம். இவர்கள் வீடியோ கால் மூலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுகிழமை இவர்கள் பேச்சுவார்த்தை செய்தனர். சுமார் 2 மணி நேரம் இவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். இதுதான் எல்லையில் நடந்த மாற்றத்திற்கு காரணம் ஆகும்.

    என்ன மாற்றம்

    என்ன மாற்றம்

    இந்த நிலையில் லடாக் பிரச்சனை தொடர்பாக இந்தியா அடுத்து செய்ய வேண்டிய விஷயங்கள், நடவடிக்கைகள் குறித்து இந்தியா முக்கிய முடிவை எடுக்க உள்ளது. இதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கியமான திட்டங்களை வகுத்துள்ளார். நேற்று இது தொடர்பாக மீட்டிங் நடந்தது. அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர்.

    அடுத்து என்ன

    அடுத்து என்ன

    இதில் லடாக் எல்லையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பாங்காங் திசோ பகுதியில் இருந்து சீனாவின் படைகள் முழுமையாக பின் வாங்கவில்லை. அங்கே சீனா தொடர்ந்து நிலைகொண்டு இருக்கிறது. இதனால் அங்கே எப்படி செயல்பட வேண்டும். எப்படி பேச்சுவார்த்தை மூலம் பதிலடி அளிக்க வேண்டும், என்று இதில் ஆலோசிக்கப்பட்டது.

    முக்கிய விஷயங்கள் என்ன

    முக்கிய விஷயங்கள் என்ன

    அதன்படி இதில் பின் வரும் முக்கிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது.

    1. லடாக்கில் இனி வரும் நாட்களில் எப்படி ரோந்து பணிகளை செய்வது.

    2. இனி வரும் நாட்களில் சீனாவின் ஊடுருவலை தொடக்கத்திலேயே எப்படி நிறுத்துவது.

    3. தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் ஃபபர் சோன்களை எப்படி பாதுக்கப்பது என்று மூன்று முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்தனர்.

    4. சீனா இனி எல்லையில் சீண்டாமல் இருக்க என்ன செய்வது என்றும் ஆலோசனை செய்து இருக்கிறார்கள்.

    மீண்டும் செல்கிறார்

    மீண்டும் செல்கிறார்

    இந்த நிலையில் மீண்டும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன் அஜித் தோவல் ஆலோசனை செய்ய இருக்கிறார். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இவர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர். சீனாவிடம் முக்கியமான கோரிக்கைகளை கறாராக வைக்கவே இந்த மீட்டிங் நடக்கிறது என்கிறார்கள். சீனாவிற்கு செக் வைக்கும் வகையில் அஜித் தோவல் திட்டங்களை வைத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

    English summary
    China standoff with India: Ajit Doval discussed important things the late-night top level meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X