For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

படைகளை வாபஸ் வாங்காத சீனா.. நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கும் பதற்றம்.. லடாக்கில் மீண்டும் மீட்டிங்

Google Oneindia Tamil News

லடாக்: இந்தியா - சீனா இடையே இன்று ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை இன்று நடக்க உள்ளது. எல்லையில் சீனா முழுமையாக படைகளை வாபஸ் வாங்காத நிலையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

Recommended Video

    China brings More boats and Additional troops at Pangong Lake | Oneindia Tamil

    இந்தியா சீனா இடையிலான லடாக் மோதல் முடியாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. எல்லையில் படைகளை வாபஸ் வாங்குவதாக கூறிய சீனா இன்னும் படைகளை வாபஸ் வாங்கவில்லை.

    லடாக்கில் பாங்காங் திசோ மற்றும் ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் இன்னும் சீனாவின் படைகள் உள்ளது. இதனால அந்த இடங்களில் மட்டும் பதற்றம் நிலவி வருகிறது.

    நம்ப முடியாது.. வேகமாக நகர்ந்து.. உத்தரகாண்ட் எல்லைக்கு வந்த சீன படை.. திடீரென மாற்றப்பட்ட வியூகம்! நம்ப முடியாது.. வேகமாக நகர்ந்து.. உத்தரகாண்ட் எல்லைக்கு வந்த சீன படை.. திடீரென மாற்றப்பட்ட வியூகம்!

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    கடந்த மே 5ம் தேதி முதல்முறையாக லடாக்கில் சீனாவின் படைகள் எல்லை மீறியது.இதனால் எல்லையில் சிறிய கைகலப்பு ஏற்பட்டது. அதன்பின் இந்தியாவின் லெப்டினட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதன் மூலம் எல்லையில் சீனா படைகளை வாபஸ் வாங்க ஒப்புக்கொண்டது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் கல்வான் பகுதியில் சீனா படைகளை வாபஸ் வாங்காமல் தொடர்ந்து அத்துமீறியது. இதை சோதிக்க சென்ற போது இரண்டு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கடந்த ஜூன் 17ம் தேதி வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது. அதன்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

    ஒப்புதல்

    ஒப்புதல்

    இந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் வாங்க சீனா ஒப்புக்கொண்டது. லடாக்கில் இருக்கும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பின்வாங்குவதாக சீனா கடந்த 6ம் தேதி இந்தியாவிடம் உறுதி அளித்தது. எல்லையில் இருக்கும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து 2 கிமீ தூரத்திற்கு பின் வாங்குவதாக சீனா உறுதி அளித்தது.அதேபோல் சீனாவும் எல்லையில் கல்வான், டெப்சாங் போன்ற சில இடங்களில் இருந்து படைகளை வாபஸ் வாங்கியது.

    என்ன பதற்றம்

    என்ன பதற்றம்

    ஆனால் பாங்காங் திசோ, ஹாட்ஸ்பிரிங்ஸ் போன்ற சில இடங்களில் படைகளை வாபஸ் வாங்காமல் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று இந்தியா - சீனா இடையே இன்று ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை இன்று நடக்க உள்ளது. எல்லையில் சீனா முழுமையாக படைகளை வாபஸ் வாங்காத நிலையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் கலந்து கொள்ளும் ஐந்தாவது ராணுவ பேச்சுவார்த்தை ஆகும் இது.

    English summary
    China standoff with India: Army level meeting to take place today as PLA not backing off in few places in Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X