For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீர் முடிவு.. இன்று காலை லடாக் செல்கிறார் முப்படை தளபதி பிபின் ராவத்.. பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

லடாக்: சீனாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் லடாக் எல்லைக்கு இன்று முப்படை தளபதி பிபின் ராவத் செல்கிறார். திடீர் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் சீனா - இந்தியா இரண்டு ராணுவ தரப்பும் தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இரண்டு நாட்டு தரப்பும் 22 முறை பேச்சுவார்த்தை செய்துள்ளது.

கல்வான் பகுதியில் கடந்த 15-16 தேதிகள் நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சண்டைக்கு பிறகு நடந்த எந்த விதமான எல்லை பேச்சுவார்த்தையும் வெற்றியில் முடியவில்லை.

அதே டீம்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வல்லுநர்களை லடாக் அனுப்பிய இந்தியா.. எல்லோருக்கும் தனி தனி ஆபரேஷன்!அதே டீம்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வல்லுநர்களை லடாக் அனுப்பிய இந்தியா.. எல்லோருக்கும் தனி தனி ஆபரேஷன்!

என்ன நடந்தது

என்ன நடந்தது

நேற்று முதல்நாள் இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து படைகளை வாபஸ் வாங்க இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

வாபஸ் வாங்கவில்லை

வாபஸ் வாங்கவில்லை

சீனா இந்த பேச்சுவார்த்தையில் கொஞ்சம் இறங்கி வந்ததாக கூறப்பட்டது. கல்வானில் பிரச்சனையாக இருக்கும் மூன்று கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து படைகளை வாபஸ் வாங்க இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டது என்றார்கள். ஆனால் பேச்சுவார்த்தை முடிந்து 20 மணி நேரம் முடிந்த பின்பும் கூட கல்வான் பகுதியில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கவில்லை.

அச்சம்

அச்சம்

இதனால் லடாக்கில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு கூடிக்கொண்டே செல்கிறது. அங்கு தொடர் பேச்சுவார்த்தைகள் பெரிதாக பலன் அளிக்கவில்லை. சீனாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் லடாக் எல்லைக்கு இன்று முப்படை தளபதி பிபின் ராவத் செல்கிறார். திடீர் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை அவர் எல்லையில் லே பகுதியில் பார்வையிட இருக்கிறார்.

என்ன செய்வார்

என்ன செய்வார்

வடக்கு ராணுவப்படை மற்றும் 14 கார்ப்ஸ் (corps) படைகள் உடன் பிபின் ராவத் ஆலோசனை செய்ய உள்ளார். இவருடன் ராணுவ தளபதி நரவனேவும் எல்லைக்கு செல்ல உள்ளார். இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் இதை தற்போது அவர் ஒத்திவைத்து இருக்கிறார்.

English summary
China standoff with India: CDS Bipin Rawat will go to Ladakh today morning amid raising tension.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X