For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்தோசப்பட முடியாது... அவங்க திரும்பவும் வர வாய்ப்பிருக்கு சீனா குறித்து எச்சரிக்கும் இந்திய ராணுவம்

Google Oneindia Tamil News

லடாக்: சீனா தனது படைகளை கால்வான் பள்ளத்தாக்கின் ரோந்து பாய்ண்ட் 14 இல் இருந்து விலக்கிவிட்டதாக சந்தோசப்பட முடியாது, ஏனெனில் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் அங்கு வர வாய்ப்பு உள்ளது என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.

Recommended Video

    'China மீண்டும் வருவார்கள்' -Indian Army எச்சரிக்கை | India China Border

    சீன ராணுவம் இந்தியாவுன் இரண்டு மாத கால எல்லை மோதலுக்கு பின்னர் லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் மூன்று ,இடங்களில் இருந்து உராய்வு தனது துருப்புக்களை விலக்கி கொண்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு விலக்கி கொண்டுள்ளது..

    சீன ராணுவம் ஜூன் 15 மோதலின் இடமான கால்வான் பள்ளத்தாக்கில் ரோந்து பாய்ண்ட் 14 இல் அமைத்த கூடாரங்கள் மற்றும் பிற தற்காலிக கட்டுமானங்களை அகற்றியுள்ளது என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ரா ஆகிய இரண்டு எல்லைக்காட்டு கோடுகளின் இடங்களின் இருந்து சீன ராணுவத்தின் வாகனங்கள் சென்றதை இந்திய ராணுவ வீரர்கள் கவனித்துள்ளனர்.

    அந்த '800 மீட்டர்' நிலப்பரப்புக்குதான்.. கால்வானில் இந்தியாவுடன் சீனா மோதுவதன் பின்னணிஅந்த '800 மீட்டர்' நிலப்பரப்புக்குதான்.. கால்வானில் இந்தியாவுடன் சீனா மோதுவதன் பின்னணி

    ஆரம்ப நிலை மாற்றம்

    ஆரம்ப நிலை மாற்றம்

    இருப்பினும், சீனாவிடம் இருந்து வந்த இந்த முன்னேற்றங்கள் குறித்து அதிகாரிகள் கூறும் போது, சந்தோஷப்பட முடியாது. ஏனெனில் இது ஜஸ்ட் ஆரம்ப நிலையிலான பின்வாங்கல் தான். சீனர்கள் 1.5 கி.மீ பின்வாங்கியுள்ளனர். இந்திய துருப்புக்களும் சற்று பின்வாங்கிவிட்டன. ஆனால் சீனா மீண்டும் வர வாய்ப்பு உள்ளது.. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வர முடியும். நாங்கள் எல்லை நிலவரத்தை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    திடீரென சண்டை

    திடீரென சண்டை

    முன்னதாக சீனா திடீரென லடாக் எல்லையில் ஆக்கிரமித்து கட்டிய கூடாரத்தை காலி செய்யக்கோரி இந்திய ராணுவத்தினர் கேட்ட போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 20 இந்திய வீரர்களும், குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான சீன வீரர்களும் கால்வானில் கொல்லப்பட்டனர். ரத்தக்களரியாக மாறிய கால்வான் மோதலுக்கு பிறகு சீனா தற்போது படைகளை விலக்கி கொண்டு தற்காலிகமாக கூடாரத்தை காலி செய்துள்ளது

    கால்வானில் வெள்ளம்

    கால்வானில் வெள்ளம்

    எனினும் முழுமையான பேச்சுவார்த்தை நடந்து முடியும் வரை, சீனா ஆக்கிரமித்த இடங்களை விட்டுத்தராது என்பது தெளிவாக தெரிகிறது. தற்போதைய நிலையில்
    அக்சாய் சீனாவில் பனி உருகுவதால் கால்வான் நதியில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. எனவே தற்போது அங்கு படைகளை விலக்கி உள்ளது. ஆனால் பின்னாளில் திரும்ப வர வாய்ப்பு உள்ளது. இதனால் இந்திய ராணுவம் எச்சரிக்கையுடன் உள்ளது.

    இந்தியா நம்பிக்கை

    இந்தியா நம்பிக்கை

    இதனிடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் எல்லை பதட்டங்களை குறைப்பது குறித்து நம்பிக்கை வெளிப்பட்டிருந்தது. எல்லையில் படைகளை விலக்கவும், முடக்குவதையும், அமைதி அமைதியை முழுமையாக மீட்டெடுப்பதையும் உறுதி செய்வது அவசியம் என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    சீனா அறிக்கை

    சீனா அறிக்கை

    சீன வெளியிட்ட அறிக்கையில் ராஜாங்க முறைப்படி இரண்டு நாட்டு தரப்பும் பேச வேண்டும். இதன் மூலமே எல்லை பிரச்சனையை நாம் தீர்க்க வேண்டும். தற்போது எல்லையில் நடக்கும் மாற்றங்களை சீனா வரவேற்கிறது. சீனாவின் குறிக்கோளை போலவே இந்தியாவும் அதே குறிக்கோளோடும் செயல்படும் என்று நம்புகிறோம். எங்கள் எல்லையை பாதுகாக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சீனாவின் எல்லை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளது.

    English summary
    Chinese Army Can Come Back in galwan, says Indian Army . now Galwan River is in spate given the snow melt in Aksai China, and some of the disengagement could be the Chinese merely shifting their tents and men because of it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X