For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன வேண்டுமானாலும் நடக்கும்.. தயாராக இருங்கள்.. ராஜ்நாத் சிங் அனுப்பிய மெசேஜ்.. ஆக்சனுக்கு ரெடி!

Google Oneindia Tamil News

லடாக்: லடாக்கில் எல்லையில் பாங்காங் திசோ அருகே சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதால் அங்கு ராணுவ ரீதியான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது. இதற்காக இந்திய பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Recommended Video

    India-China Border : Indian Army-க்கு Rajnath Singh அதிரடி Message | Oneindia Tamil

    லடாக்கில் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பும் சீனா தொடர்ந்து சில ஆக்கிரமிப்பு இடங்களில் இருந்து பின்வாங்காமல் இருக்கிறது. அங்கு டெப்சாங், கல்வான், ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய இடங்களில் இருந்து சீனா 2 கிமீ தூரத்திற்கு படைகளை பின்வாங்கிவிட்டது.

    ஆனால் இன்னும் பாங்காங் திசோ பகுதியில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் கோக்ரா பகுதியில் இருந்தும் சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை.

    Kargil Vijay Diwas:கார்கில் போர் வெற்றி நினைவு நாள்.. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதைKargil Vijay Diwas:கார்கில் போர் வெற்றி நினைவு நாள்.. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை

    சீனாவின் திட்டம் என்ன

    சீனாவின் திட்டம் என்ன

    இதனால் சீனா லடாக் எல்லையில் என்ன திட்டம் போடுகிறது என்று கேள்வி எழுந்துள்ளது. பொறுமையாக காத்திருந்து தாக்குதல் நடத்த சீனா திட்டமிட்டுள்ளதாக என்று கேள்வி எழுந்துள்ளது. அதாவது இப்போது படைகளை வாபஸ் வாங்காமல் இருந்துவிட்டு, அதன்பின் குளிர் காலத்தில் தாக்குதல் நடத்த சீனா திட்டம் போடுறதா? இந்திய வீரர்கள் அசைந்த நேரம் பார்த்து தாக்க சீனா நினைக்கிறதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    தயார்

    தயார்

    இதனால் லடாக் எல்லையில் ராணுவ ரீதியான அதிரடி நடவடிகைகளை எடுக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது. இதற்காக இந்திய பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. எப்போதும் தயாராக வீரர்கள் இருக்க வேண்டும். எப்போது அழைத்தாலும் உடனே தாக்குதல் நடத்த தயாராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டதாக தகவல்கள் வருகிறது.

    உத்தரவு

    உத்தரவு

    மேலும் எல்லா விதமான ஆர்மி செயல்முறைக்கு ராணுவம் தயாராக இயற்க வேண்டும். தேவைப்பட்டால் தாக்குதல் நடத்தும் வகையில் துருப்புகளை வைத்து இருங்கள், என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதற்கு முன்பே ராஜ்நாத் சிங் இதுகுறித்து குறிப்பிடும் போது, எல்லையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இப்போது என்னால் எதையும் உறுதி அளிக்க முடியாது.

    உறுதியாக கூற முடியாது

    உறுதியாக கூற முடியாது

    எல்லையில் என்ன நடக்கும். சீனா மொத்தமாக பின்வாங்குமா என்பதை உறுதியாக கூற முடியாது, என்று குறிப்பிட்டு இருந்தார். இதை அடுத்தே ராணுவ வீரர்களை தயாராக இருக்கும்படி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார் என்கிறார்கள். எல்லையில் இத்தனை நாட்களாக இருந்த நிலையை மாற்ற சீனா முயன்று வருகிறது. புதிதாக சீனா இந்திய பகுதியில் தனது துருப்புகளை குவித்து,அதை புதிய நிரந்தர நிலையாக மாற்ற துடிக்கிறது.

    செல்ல முடியவில்லை

    செல்ல முடியவில்லை

    இதனால் தற்போது எல்லையில் இந்திய படைகள் ரோந்து பணிகளை கூட சரியாக மேற்கொள்ள முடியவில்லை. இதனால்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. முடிந்த அளவு பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை சரி செய்ய இந்திய முயன்று வருகிறது. இல்லாதபட்சத்தில் ராணுவ வீரர்களை தயாராக இருக்கும்படியும் இந்திய ராணுவத்திற்கு உத்தரவ பறந்துள்ளது.

    English summary
    China standoff with India: Delhi prepares the military If the talks fail in Ladakh in coming days .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X