For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிவேக ஜெட்களை கொண்டு வந்த சீனா.. இந்தியா களமிறக்கிய "மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம்".. மாஸ் பதிலடிக்கு ரெடி

Google Oneindia Tamil News

லடாக்: சீனாவின் வான்வெளி தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் தற்போது இந்திய ராணுவம் எல்லையில் மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம்களை (defence missile system) களமிறக்கி உள்ளது.

இந்தியா சீனா இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு கூடிக்கொண்டே செல்கிறது. அங்கு தொடர் பேச்சுவார்த்தைகள் பெரிதாக பலன் அளிக்கவில்லை.

இதனால் இரண்டு நாடுகளும் எல்லையில் தீவிரமாக தங்கள் விமானப்படைகளை தயார் செய்து வருகிறது. இந்தியாவும் அவசரமாக போர் விமானங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கி வருகிறது .

இந்திய வீரர்களின் திறமையை பார்த்து நடுங்கிய சீனா.. இந்திய வீரர்களின் திறமையை பார்த்து நடுங்கிய சீனா..

வான்வெளி தாக்குதல்

வான்வெளி தாக்குதல்

இந்த நிலையில் லடாக் எல்லையில் சீனா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது. அங்கு சீனாவின் போர் விமானங்கள் அதிகமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது. டெப்சாங் பகுதிக்கு அருகே சீனாவின் 30 சுகோய் -30 போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் மிக அருகே சீனாவின் விமானப்படை தீவிரமாக ரோந்து செய்கிறது. அதோடு பாகிஸ்தானிலும் ஸ்கார்டு விமானதளத்தில் சீனாவின் போர் விமானங்கள் இறக்கப்பட்டுள்ளது.

எப்போது வேண்டுமானாலும்

எப்போது வேண்டுமானாலும்

இதனால் சீனாவின் போர் விமானங்கள் எப்போது வேண்டுமானாலும் எல்லை மீறி இந்தியாவிற்கு வரலாம். சீனாவின் போர் விமானங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தலாம். சீனா ஏவுகணைகளை வீசுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது இந்தியா எல்லையில் எதற்கும் தயாரான நிலையில் இருக்கிறது.

அனைத்திற்கும் தயார்

அனைத்திற்கும் தயார்

இந்தியா தனது எல்லையில் தற்போது போர் விமானங்களை குவித்து வருகிறது. இந்தியாவின் மிக் 21 உட்பட பல்வேறு வகையான மிக் விமானங்கள், சுகோய் விமானங்கள், எப்16 டைனமிக்ஸ், சாப் ஜாஸ் 39, HAL HF-24 மருத் ஆகிய விமானங்களை இந்தியா எல்லையில் களமிறக்கி உள்ளது. இந்த நிலையில் புதிய திருப்பமாக சீனாவின் வான்வெளி தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் தற்போது இந்திய ராணுவம் எல்லையில் மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம்களை (defence missile system) களமிறக்கி உள்ளது.

அப்படி என்றால் என்ன

அப்படி என்றால் என்ன

மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) என்பது ஏவுகணைகள் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் அல்லது எதிர் ஏவுகணைகள் அல்லது குண்டுகள் என்று கூறலாம். ஒரு நாட்டை தாக்க வரும் ஏவுகணைகளை, எதிர் ஏவுகணைகள் ஏவி, குண்டுகளை வீசி இந்த மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) தாக்கி அழிக்க முடியும். ஏவுகணைகளை மட்டுமின்றி போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களையும் இதனால் தாக்க முடியும்.

Recommended Video

    Russia -விடம் India வாங்கும் அதிநவீன Missile defense system... முழு தகவல்
    இந்தியா களமிறக்கி உள்ளது

    இந்தியா களமிறக்கி உள்ளது

    இந்த நிலையில் எல்லையில் தற்போது இந்தியா நவீன மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம்களை களமிறக்கி உள்ளது.ஆகாஷ் மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் எனப்படும் மிக அதி வேகமாக தரையில் இருந்து வானத்தில் தாக்கும் மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம்களை இந்தியா களமிறக்கி உள்ளது. அதேபோல் நாக் (Nag), ஹெலினா ( Helina ), அமோகா (Amogha) ஆகிய மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம்களையும் இந்தியா களமிறக்கி உள்ளது. இதனால் இந்தியா அனைத்திற்கும் தயார் நிலையில் உள்ளது என்று கூறுகிறார்கள்.

    English summary
    China standoff with India: India bring the anti-missile system to border amid raise in Beijing air activity.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X