For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்கு செக்டாரில்.. வரைபடங்களை கேட்டு.. சீனாவிற்கு அழுத்தம் தரும் இந்தியா.. இதுதான் காரணம்

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் ரோந்து பணிகளின் போது வரைபடங்களை பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று சீனாவிற்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது.

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையே கடந்த மாதம் மோதல் வெடித்தது, இதில இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டது. இந்தியா சார்பில் 20வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா சார்பில் 40 பேர் வரை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.,

இந்த மோதலுக்கு பின் சீனா மற்றும் இந்தியா இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்தியா எல்லையில் ஆக்கிரிமிப்பில் ஈடுபட்ட சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. உங்களின் திட்டமிட்ட செயல் சீனாவிடம் நேரடியாக இந்தியா எச்சரித்தது. டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு தடைவிதித்தது.

உயர்மட்ட பேச்சுவார்த்தை

உயர்மட்ட பேச்சுவார்த்தை

இது ஒருபுறம் எனில் படைகள் எல்லையில் குவிக்கப்பட்டன. இதனால் பதற்றம் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஒரு பக்கம் பதற்றம் அதிகரித்தாலும் மறுபக்கம் இரு நாடுகளும் எல்லையில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தன. அண்மையில் சீனா இந்தியா இடையே உயர்மட்ட பேச்சுவார்ததை நடந்தது.

கால்வான் பள்ளத்தாக்கு

கால்வான் பள்ளத்தாக்கு

இதன் பின்னர் சீனா தனது படைகளை கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து திரும்ப பெற்றது. படைகளை சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு பின் வாங்கியது. இந்தியா எப்போதும் போல் எல்லையில் படைகளுடன் இருந்தது.ஆனால் அதிகப்படியான படை வீரர்களை குறைத்தது. தற்போது எல்லையில் இரு நாடுகளும் படைகளை விலக்கி அமைதியை நோக்கி நகர்ந்து வருகின்றன.

வரைபடம் கேட்கிறது

வரைபடம் கேட்கிறது

இந்நிலையில் படைகளை விலக்கி அமைதி திரும்பிய பின்னர் , மேற்கு எல்லையில் ரோந்துக்காக வரைபடங்களைப் பரிமாறிக் கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது. இப்படி செய்தால் இரு நாட்டுக்கும் இடையே உள்ள உரிமைகோரல் கோடுகள் மற்றும் உண்மையான கட்டுப்பாட்டை தெளிவுபடுத்தும். மேலும் இது எல்லையில் நிர்வாகம் மற்றும் ரோந்து நெறிமுறைகளை எளிதாக்கும்.

Recommended Video

    China தயாரிக்கும் அதிநவீன stealth fighter J-20 விமானம்
    இந்தியா வற்புறுத்தல்

    இந்தியா வற்புறுத்தல்

    ஆனால் மேற்கு துறையில் வரைபடங்களை பரிமாறிக்கொள்ள சீனா மறுத்துவிட்டது.எல்லை தொடர்பான 22 சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், மத்திய துறைக்கு மட்டுமே வரைபடங்களை பரிமாறிக்கொள்ள சீனா ஒப்புகொண்டுள்ளது. மேற்கு துறையில் வரைபடங்களை பரிமாறிக்கொள்ளவோ அல்லது எல்.ஐ.சி.யை தெளிவுபடுத்தவோ எந்த விருப்பமும் சீனா காட்டவில்லை. எனினும் கிழக்கு லடாக் அமைந்துள்ள மேற்கு துறையில் வரைபடங்களை பகிருமாறு சீனாவிற்கு அழுத்தம் கொடுக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.

    English summary
    India plans to push the Chinese side for an exchange of maps in the western sector after the process of disengagement and de-escalation is complete and Indian troops go back to their old patrolling posts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X