For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட்டாக் ஹெலிகாப்டர்கள்.. ஹைடெக் போர் விமானங்கள்.. லடாக்கில் இந்தியா புதிய மூவ்.. சீனா அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

லடாக்: லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியா தற்போது எல்லையில் அதிக அளவில் விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை களமிறக்கி உள்ளது.

Recommended Video

    India vs China : US deploys airforce in the South China Sea against China

    இந்தியா - சீனா இடையிலான லடாக் மோதல் முக்கியமான தருணத்தை எட்டி இருக்கிறது. லடாக்கில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. டெப்சாங், பாங்காங் திசோ, கல்வான்ஆகிய பகுதிகளில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது.

    அதேபோல் லடாக்கில் அனைத்து எல்லை பகுதியிலும் சீனா தொடர்ந்து தனது விமான படைகளை குவித்து வருகிறது. அதிக அளவில் சீனா தனது விமானப்படையை களமிறக்கி உள்ளது. சீனாவின் ஊடுருவலை தடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் படைகளை குவித்து வருகிறது.

    கால்வன் மோதல்.. ஜெய்சங்கருக்கு போன் போட்டு பேசிய பாம்பியோ.. இந்தியாவுக்கு முழு ஆதரவு? கால்வன் மோதல்.. ஜெய்சங்கருக்கு போன் போட்டு பேசிய பாம்பியோ.. இந்தியாவுக்கு முழு ஆதரவு?

    இந்தியா பதிலடி

    இந்தியா பதிலடி

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கடந்த சில தினங்களாக எல்லையில் விமான படைகளை குவித்து வந்தது. தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வந்தது. இந்த நிலையில் அதிரடி திருப்பமாக நேற்று மிக அதிக அளவில் இந்தியா லடாக் எல்லைக்கு போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் அனுப்பி உள்ளது. நேற்று காலையில் இருந்து இந்தியா சார்பாக எல்லையில் அதிக போர் விமானங்கள் களமிறக்கப்பட்டு வருகிறது.

    இந்தியா அனுப்பியது

    இந்தியா அனுப்பியது

    அதன்படி லடாக் எல்லைக்கு தற்போது கண்காணிப்புப் பணியில் நவீன ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவை அட்டாக் வகையான ஹெலிகாப்டர்கள் ஆகும். அதிவேகமாக சென்று முகாம்களை தாக்க கூடிய அட்டாக் வகை ஹெலிகாப்டர்கள் ஆகும் இது. ராணுவ முகாம்களுக்கு மேலே பறந்து சென்று, அதிரடியாக நொடிப்பொழுதில் அதை தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது ஆகும் இந்த ஹெலிகாப்டர்கள்.

    சின்னுக் ஹெலிகாப்டர்

    சின்னுக் ஹெலிகாப்டர்

    அதேபோல் அதிக எண்ணிக்கையில் நேற்று சின்னுக் வகை ஹெலிகாப்டர்களும் களமிறக்கப்பட்டு உள்ளது. இந்த சின்னுக் வகை ஹெலிகாப்டர்கள் எல்லையில் அதிக அளவில் வீரர்களை களமிறக்கவும் உதவும். ஒரே நேரத்தில் 200-300 வீரர்களை இதன் மூலம் எளிதாக இடமாற்றம் செய்ய முடியும். லடாக் எல்லையில் போர் வந்தால், அதிக அளவில் வீரர்களை களமிறக்க வசதியாக இந்தியா இந்த ஹெலிகாப்டர்களை அங்கே களமிறக்கி உள்ளது.

    வேறு விமானங்கள்

    வேறு விமானங்கள்

    அதேபோல் இந்தியா சி 17 குளோப்மாஸ்டர் (C-17 Globemaster III) மற்றும் சி 130 ஜெ சூப்பர் ஹெர்குலீஸ் (C-130J Super Hercules) வகை டிரான்ஸ்போர்ட் விமானங்கள் அங்கே கொண்டு செல்லப்பட்டு உள்ளது. நவீன ஆயுதங்களையும், போர் கருவிகளையும் எல்லைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த விமானங்கள் களமிறக்கப்பட்டு உள்ளது. மேலும் இல்லுயுசின் 76 (Ilyushin-76) போர் டிரான்ஸ்போர்ட் விமானங்களையும் இந்தியா இங்கே களமிறக்கி உள்ளது.

    அதிக படைகள்

    அதிக படைகள்

    இதனால் இங்கே இந்தியா அதிக அளவில் படைகளை குவிக்க முடியும் என்று கூறுகிறார்கள். படைகளை குவிக்கும் பொருட்டும், எல்லைக்கு வீரர்களை அதிக அளவில் அனுப்பும் பொருட்டும் இந்தியா இப்படி விமானங்களை அனுப்பி வருகிறது. இது போக சுகோய் 30MKI, மிக்-29 ரக போர் விமானங்களும் சீன எல்லையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    China standoff with India: India sends attack helicopters and war planes to border today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X