For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னமோ நடக்கிறது.. மத்திய அமைச்சர்களை சந்திக்க போகும் ராணுவ தளபதி.. முக்கிய மீட்டிங்.. பின்னணி!

Google Oneindia Tamil News

லடாக்: இந்திய ராணுவ தளபதி இன்று மத்திய அமைச்சர்கள் உடன் சந்திப்பு நடத்துகிறார். பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் ஆகியோரிடம் விளக்கம் அளிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    எல்லையில் பறந்த போர் விமானங்கள்.... Ladakh-ல் இரவு நடந்தது என்ன?

    லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு சீனாவின் படைகள் தொடர்ந்து அங்கே குவிக்கப்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் இந்த சண்டை முடிய வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள்.

    லடாக்கில் நடந்த 20க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் எல்லையில் போர் நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    லடாக் தாக்குதலுக்கு அவர்தான் லடாக் தாக்குதலுக்கு அவர்தான்

    கல்வான்

    கல்வான்

    இந்த நிலையில் கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. கல்வானில் மீண்டும் சீனா தனது படைகளை குவித்து வருகிறது.

    புதிய

    புதிய

    அதோடு லடாக்கில் இருக்கும் இந்திய விமானப்படை தளமான Daulat Beg Oldie இருக்கும் டெப்சாங் பகுதிக்கு அருகே சீனா தனது படைகளை குவித்து வருகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் DBO விமானப்படை தளத்தில் இருந்து வெறும் 23 கிமீ தூரத்தில் சீனா புதிய கேம்பை அமைத்து உள்ளது. அதேபோல் டெப்சாங்கில் இருக்கும் இந்திய படைத்தள பகுதியில் இருந்து 21 கிமீ தூரத்தில் சீனா இன்னொரு படைத்தளத்தை அமைத்து இருக்கிறது.

    நேற்று ஆய்வு

    நேற்று ஆய்வு

    இந்த நிலையில் இந்திய ராணுவ தளபதி நரவானே நேற்று லடாக் எல்லையில் இந்திய வீரர்களை சந்தித்தார். எல்லையில் இருக்கும் நிலவரம் குறித்து அவர் வீரர்களிடம் கேட்டறித்தார். கல்வான் பகுதியில் நிலைமை எப்படி இருக்கிறது என்று கேட்டறிந்தார். அதேபோல் டெப்சாங் பகுதியில் சீனா படைகளை குவித்து வருவது தொடர்பாகவும் அவர் வீரர்களிடம் கேட்டறிந்தார்.

    இன்று பேச்சு

    இன்று பேச்சு

    இந்திய ராணுவ தளபதி இன்று மத்திய அமைச்சர்கள் உடன் சந்திப்பு நடத்துகிறார். பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் ஆகியோரிடம் விளக்கம் அளிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். எல்லையில் இருக்கும் நிலைமை குறித்து ராணுவ தளபதி நரவானே விளக்கம் அளிக்க உள்ளார். இந்த சந்திப்பில் இன்று முக்கியமான முடிவு எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    China standoff with India: Indian army chief will meet top leaders today on the border issue .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X