For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரிய பெரிய கூடாரம்.. அதிர வைத்த அந்த 9 கிமீ பகுதி.. கல்வானில் சீனாவின் திட்டம்தான் என்ன? பின்னணி!

Google Oneindia Tamil News

லடாக்: லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் சீனா புதிய கூடாரங்களை அமைத்துள்ளது. சீனாவின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் கல்வான் பகுதியில் இந்தியா- சீனா இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. கட்டுப்பாட்டு பகுதி எண் 14க்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் இந்திய வீரர்களை மூர்க்கத்தனமாக தாக்கியது.

இந்த மோசமான சண்டையில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் எத்தனை வீரர்கள் பலியானார்கள் என்று முழு விபரம் இன்னும் வெளியாகவில்லை.

லடாக் எல்லையில் பாலம் கட்டும் பணி.. கால்வன் ஆற்றில் மூழ்கி இந்திய வீரர்கள் 2 பேர் மரணம் லடாக் எல்லையில் பாலம் கட்டும் பணி.. கால்வன் ஆற்றில் மூழ்கி இந்திய வீரர்கள் 2 பேர் மரணம்

போகவில்லை

போகவில்லை

இந்த சண்டையை தொடர்ந்து இரண்டு தரப்பிலும் தீவிரமாக பேச்சுவார்த்தை நடந்தது. 20 முறைக்கும் மேல் இரண்டு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எல்லா பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. கல்வான் பகுதியில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கல்வான் மொத்தமும் எங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாட தொடங்கி உள்ளது.

சீனாவின் கூடாரம்

சீனாவின் கூடாரம்

கல்வான் பகுதியில் சண்டை நடந்த 14வது கட்டுப்பட்டு பகுதியில் இருந்து சில மீட்டர்கள் தூரத்தில் சீனா கடந்த சில வாரமாக படைகளை குவித்து வந்தது. தினமும் நூற்றுக்கணக்கில் சீனா அங்கே படைகளை குவித்தது. அதோடு சீனாவின் போர் கருவிகள், ஆயுதங்கள் ஆகியவற்றை சீனா தொடர்ந்து களமிறக்கி வந்தது. இது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் முன்பே வெளியாகி இருந்தது.

புதிய புகைப்படம்

புதிய புகைப்படம்

தற்போது இது தொடர்பான புதிய சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கல்வான் பகுதியில் எல்லைக்கு அருகே மொத்தமாக 9 கிமீ பகுதியில் சீனா கடுமையான ஆக்கிரமிப்புகளை செய்துள்ளது. அங்கு சீனா
20 கூடாரங்களை அமைத்துள்ளது. கருப்பு நிற தார்பாய் கொண்டு சீனா அங்கு பெரிய பெரிய கூடாரங்களை அமைத்துள்ளது.

மொத்தமாக தடுப்பு

மொத்தமாக தடுப்பு

இந்த கூடாரங்கள் உள்ளே பெரிய அளவில் ஆயுதங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நதிக்கு சில மீட்டர்கள் தூரத்தில்தான் சீனா டாங்கிகளை களமிறக்கி உள்ளது. சீனாவின் நவீன 10 டாங்கிகள் இங்கே கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தமாக இந்தியாவின் ரோந்து பணிகளை கல்வான் பகுதியில் தடுக்கும் வகையில் சீனா அங்கு படைகளை குவித்து உள்ளது. அதேபோல் அங்கே சாலைகளை அமைத்து வருகிறது.

9 கிமீ தூரம்

9 கிமீ தூரம்

கல்வான் பகுதியில் மொத்தம் 9 கிமீ தூரத்திற்கு சீனா சாலைகளை அமைத்துள்ளது. அங்குதான் அதிகமாக படைகள் களமிறக்கப்பட்டு உள்ளது. இங்குதான் சீனாவின் போர் விமானங்கள் ரோந்து பணிகளை செய்து வருகிறது. இந்த இடம் மீது சீனா கடுமையான கவனம் செலுத்தி வருகிறது. இது பல்வேறு விதமான கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

Recommended Video

    பழைய வீடியோவை பகிர்ந்த China ஊடகம்... கிண்டல் செய்த நெட்டிசன்கள்
    திட்டம் என்ன

    திட்டம் என்ன

    சீனாவின் இந்த செயல் நல்லதற்கல்ல என்று கூறுகிறார்கள். கண்டுப்பாக சீனாவிடம் எதோ பிளான் உள்ளது என்கிறார்கள். இதனால் கல்வானில் மொத்தமாக ஆக்கிரமிப்புகளை நடத்த சீனா திட்டமிடுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த 9 கிமீ பகுதியை ராணுவ தளமாக வைத்துக் கொண்டு, மற்ற இடங்களில் ஆக்கிரமிப்புகளை செய்ய சீனா திட்டமிடுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    China standoff with India: PLA brings more troops and construction near Galwan valley.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X