For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்ப முடியாது.. வேகமாக நகர்ந்து.. உத்தரகாண்ட் எல்லைக்கு வந்த சீன படை.. திடீரென மாற்றப்பட்ட வியூகம்!

Google Oneindia Tamil News

டேராடூன்: சீனாவை சேர்ந்த ராணுவ படைகள் தற்போது லடாக்கில் குவிக்கப்பட்டு வரும் நிலையில், வேகமாக நகர்ந்து இன்னொரு பக்கம் உத்தரகாண்ட் அருகே குவிக்கப்பட்டு வருகிறது,. இந்தியா நேபாளம் எல்லை அருகே சீனாவின் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது.

லடாக்கில் சீனாவின் அத்துமீறல் இன்னும் மொத்தமாக முடிவிற்கு வரவில்லை. அங்கு கடந்த மே 5ம் தேதி சீனா முதல்முறை அத்துமீறியது. லடாக் மற்றும் சிக்கிமில் ஒரே நாளில் சீனா அத்துமீறியது.

இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. அதன்பின் கல்வான் மோதல் காரணமாக இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் நிலை உருவானது.

அம்பலமான தந்திரம்.. பாங்காங் திசோவில் படகுகளை இறக்கிய சீனா.. புதிய டென்ட்கள்.. படைகள் குவிப்பு! அம்பலமான தந்திரம்.. பாங்காங் திசோவில் படகுகளை இறக்கிய சீனா.. புதிய டென்ட்கள்.. படைகள் குவிப்பு!

வாபஸ் வாங்கும்

வாபஸ் வாங்கும்

இந்த நிலையில் கடந்த ஜூலை 5ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் எல்லையில் படைகளை வாபஸ் வாங்க சீனா ஒப்புக்கொண்டது. அதேபோல் கல்வான், டெப்சாங் ஆகிய இடங்களில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கியது. ஆனால் இன்னும் பாங்காங் திசோ மற்றும் ஹாட்ஸ்பிரிங் ஆகிய இடங்களில் சீனா படைகளையே வாபஸ் வாங்கவில்லை. அங்கு புதிய முகாம்களை சீனா கட்டி வருகிறது.இதனால் சீனா ஏதாவது திட்டமிடுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

என்ன நிலைமை

என்ன நிலைமை

இந்த நிலையில்தான் தற்போது சீனாவின் படைகள் வேகமாக நகர்ந்து இன்னொரு பக்கம் உத்தரகாண்ட் அருகே குவிக்கப்பட்டு வருகிறது,. இந்தியா நேபாளம் எல்லை அருகே சீனாவின் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது. அங்கு இருக்கும் லிபுலேக் பகுதிக்கு அருகே சீனாவின் படைகள் வேகமாக குவிக்கப்பட்டு வருகிறது. சரியாக உத்தரகாண்ட் எல்லையில் சில கிமீ தள்ளி சீனாவின் படைகள் நிலை கொண்டு இருக்கிறது.

லிபுலேக்

லிபுலேக்

லிபுலேக் பகுதியில் மட்டுமின்றி இன்னொரு பக்கம் வடக்கு சிக்கிம் மற்றும் அருணாசலப்பிரதேசம் ஆகிய இடங்களிலும் சீனாவின் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இந்திய ராணுவ படைகளும் குவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவ தரப்பு தெரிவிக்கையில், உத்தரகாண்ட் எல்லையில் இப்படி சீனா படைகளை குவிப்பது ஒரு வகை சிக்னல்.

படைகள் குவிப்பு

படைகள் குவிப்பு

சீனா தனது வியூகத்தை மாற்றி உள்ளது. எதோ ஒன்றை மனதில் வைத்து சீனா இப்படி படைகளை குவித்து வருகிறது. சீனா எல்லையில் தயாராகி வருகிறது என்பதற்கான அறிகுறி இது. ஆனால் இந்தியாவும் இதற்கு தயாராக இருக்கிறது. இந்தியாவும் எல்லையில் சரியான எண்ணிக்கையில் படைகளை குவித்து உள்ளது. நேபாளம் எல்லை அருகே இந்தியாவும் படைகளை குவித்து வருகிறது.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

எல்லையில் இருந்து இந்தியா தனது கண்களை எடுக்க முடியாது. சீனாவை இனியும் எல்லையில் நம்ப முடியாது. சீனாவுடன் நாம் எல்லையை பகிரும் அனைத்து இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எங்கும் கவனத்தை சிதற விட கூடாது . அப்படி செய்தால் சீனா அத்துமீற வாய்ப்பு உள்ளது. சீனா தனது எல்லையை விரிவாக்க நினைக்கிறது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்திய ராணுவம் எல்லையில் உறுதியாக இருக்கிறது, என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    China brings More boats and Additional troops at Pangong Lake | Oneindia Tamil
    சொந்தம் கொண்டாடுகிறது

    சொந்தம் கொண்டாடுகிறது

    ஏற்கனவே உத்தரகாண்டில் இருக்கும் மூன்று பகுதிகளை நேபாளம் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தியா நேபாளம் இடையே நடக்கும் இந்த பிரச்சனைக்கு காரணம் லிபு லேக் பகுதிதான். எல்லையில் லிபு லேக், லம்பியாதூரா, கல்பாணி ஆகிய பகுதிகள் நேபாளுக்கு சொந்தமானது. இங்கு இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்று நேபாளம் பிரதமர் கேபி சர்மா ஒளி தெரிவித்து வருகிறார். இங்குதான் சீனா படைகளை குவித்துள்ளது.

    English summary
    China standoff with India: PLA troops move to Uttarkhand border areas today including Lipulekh and North Sikkim.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X