For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பின்வாங்கிய சீனா.. கூடாரத்தை காலி செய்து வெளியேறும் சீன வீரர்கள்.. வெளியான செயற்கைகோள் படங்கள்

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீன இராணுவம் தனது துருப்புக்களை திரும்பப் பெற்றுள்ளது. சீன துருப்புகள் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ராவில் உள்ள கூடாரங்களை காலி செய்து விட்டு புறப்பட்டு சென்றுவிட்டன. இது தொடர்பான செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    Satellite images | China Army Pullback in Galwan Valley | Oneindia Tamil

    இந்திய சீன எல்லையில் உள்ள கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகிய இருபகுதிகளில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டு இருந்தனர். கடந்த 8 வாரங்களாக படைகள் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று முதல் படைகளை வாபஸ் பெற்று சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறி வருகிறது.

    இந்நிலையில் சீன ராணுவம் இரண்டாவது நாளாக நேற்றும் இந்திய சீன எல்லையில் உள்ள கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் படைகளை வாபஸ் பெற்றுள்ளது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிகமாக கூடாரங்களை காலி செய்து வண்டிகளில் ஏற்றிக்கொண்டு சீன ராணுவத்தினர் சென்றுவிட்டனர். இது தொடர்பான செயற்கை கோள் படங்கள் வெளியாகி உள்ளன.

    ஒன்றுக்கே அலறிய சீனா.. வேகமெடுத்தது இந்தியா.. லடாக்கில் ரூ.20,000 கோடியில் சாலைகள்!ஒன்றுக்கே அலறிய சீனா.. வேகமெடுத்தது இந்தியா.. லடாக்கில் ரூ.20,000 கோடியில் சாலைகள்!

    பின்னோக்கி சீன ராணுவம்

    பின்னோக்கி சீன ராணுவம்

    எல்லையில் சீன ராணுவம் குறிப்பிட்ட தூரத்திற்கு படைகளை பின்நோக்கி சென்றுவிட்ட நிலையில், எல்லையில் மீண்டும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இந்திய ராணுவம் விழிப்புடன் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    படைகளை திரும்ப பெற்றது

    படைகளை திரும்ப பெற்றது

    முன்னதாக திங்கள்கிழமை காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோருக்கு இடையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் படைகளை திரும்ப பெறும் செயல் முறை தொடங்கியது. பேச்சுவார்த்தையின் போது துருப்புக்களை விரைவாக திரும்பப் பெற இருவரும் ஒப்புக் கொண்டனர். இதன்படி தற்போது படைகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.

    இந்திய ராணுவம் குறைக்கவில்லை

    இந்திய ராணுவம் குறைக்கவில்லை

    எனினும் இந்திய ராணுவம் இன்னும் படைகளை முழுமையாக அங்கு குறைக்கவில்லை. எச்சரிக்கையுடன் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் தங்கள் படைகளை வாபஸ் பெற்ற நிலையில் , அங்குள்ள நிலைகள் குறித்த செயற்கை கோள் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

    கூடாரங்களை காலி செய்தது

    கூடாரங்களை காலி செய்தது

    மொத்தம் 6 செயற்கைகோள் புகைப்படங்கள் சீன எல்லை குறித்து வெளியாகி உள்ளது. அந்த படங்களில் சீன ராணுவத்தினர் கால்வான் பள்ளத்தாக்கில் தாங்கள் அமைத்த தற்காலிக கூடாரங்களை காலி செய்து கொண்டு செல்வது மற்றும் வாகனங்களில் புறப்பட்டு செல்வது போன்ற காட்சிகள் இருக்கின்றன.

    English summary
    Satellite images show Chinese pullback in Galwan Valley. Chinese military withdraws troops, removes structures in Hot Springs, Gogra
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X