For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய ராணுவம் சுடவில்லை.. சீனாதான் அத்துமீறி சுட்டது.. வெளிப்படையாக அறிவித்த இந்தியா.. பரபரப்பு!

Google Oneindia Tamil News

லடாக்: லடாக் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தவில்லை, துப்பாக்கி சூடு உள்ளிட்ட ஆக்ரோஷமான நடவடிக்கைகளை செய்யவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    இந்தியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக புகார் கூறிய சீனா

    லடாக்கில் கடந்த ஒரு வாரமாக பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக சீனா கூறியுள்ளது. இந்தியா துப்பாககி சூடு நடத்தியதாக சீனா கூறியது. ஷென்போ மலைப்பகுதியை இந்தியா அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா கூறியது.

    தற்போது இந்தியா இதை மறுத்துள்ளது. இந்தியா முதல்முறையாக இது தொடர்பாக மௌனம் கலைத்துள்ளது.

    பேச்சுவார்த்தைக்கு இடையே.. வானத்தை நோக்கி சுட்ட சீனா.. லடாக் துப்பாக்கி சூடு.. வெளிவரும் உண்மைகள்! பேச்சுவார்த்தைக்கு இடையே.. வானத்தை நோக்கி சுட்ட சீனா.. லடாக் துப்பாக்கி சூடு.. வெளிவரும் உண்மைகள்!

    என்ன அறிக்கை

    என்ன அறிக்கை

    இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லையில் அமைதியை நிலைநாட்ட இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. படைகளை திரும்ப பெறவும், நிலைமையை சரி செய்யவும் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது . ஆனால் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்திய படையை தூண்டும் வகையில் சீனா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது .

    இந்தியா

    இந்தியா

    எல்லையில் இந்தியா இதுவரை அத்துமீறவில்லை. லடாக் எல்லையில் எப்போதும் இந்தியா அத்துமீறியது இல்லை. எல்ஏசி பகுதியை இந்தியா கடந்தது இல்லை. லடாக் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தவில்லை. துப்பாக்கி சூடு உள்ளிட்ட ஆக்ரோஷமான நடவடிக்கைகளை செய்யவில்லை.

    சீனா

    சீனா

    எல்லையில் சீனாதான் ஒப்பந்தங்களை மீறி செயல்பட்டு வருகிறது. ராணுவ ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் சீனா தான் எல்லையில் அத்துமீறி வருகிறது. சீனா நேற்று எல்லையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது . இந்திய எல்லையை நெருங்கி வர சீனா முயன்றது. இந்திய எல்லையில் படைகளை கண்டதும் சீனா வானத்தை நோக்கி சுட்டது.

    சீண்டுகிறது

    சீண்டுகிறது

    ஆனால் சீனா இப்படி இந்தியாவும் சீண்டும் வகையில் செயல்பட்டாலும் இந்தியா திரும்பி சுடவில்லை. இந்தியா எல்லையில் அமைதி காத்தது. இந்திய ராணுவம் ஒப்பந்தத்தை மீறாமல் அமைதியாக இருந்தது. எல்லையில் அமைதியை நிலைநாட்ட இந்தியா உறுதியாக இருக்கிறது . அதே சமயம் இந்தியாவை பாதுகாக்கவும் நாங்கள் உறுதி பூண்டு இருக்கிறோம், என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது.

    English summary
    China standoff with India: We didn't shoot, PLA fired at sky says Indian army in the press release.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X