For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் விட்டதை இங்கு பிடிக்க வந்ததா சீனா.. சீன அதிபர் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் மொத்தமும் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையை பற்றியே பேசியது. ஆனால் சீன அதிபர் வந்ததால் இந்தியாவுக்கு என்ன லாபம். அமெரிக்காவிடம் விட்டதை பிடிக்க இந்தியாவிடம் வந்ததா, அல்லது சீனா அமெரிக்கா வர்த்தக போரை சரியாக பயன்படுத்த இந்தியா விரும்பியதா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

இந்தியாவின் பங்காளி என்றால் உடனே சட்டென சொல்லிவிடலாம் சீனாவை. எப்படி பங்காளி என்று சொல்கிறோமோ, அந்த பங்காளி என்ற வார்தைக்கு அர்த்தம் தரும் வகையில் அதிகப்படியான சண்டையும் இருவருக்கும் இடையே உள்ளது. அருணாச்சல பிரதேசம் தொடங்கி காஷ்மீர் வரை இப்படி ஏராளமாக சொல்லிக்கொள்ளலாம்.

ஆனால் அந்த சண்டைகளை பற்றி வெறுப்பை வளர்க்கும் வகையில் பேசாமல், கடந்த இரண்டு நாட்களாக பங்காளிகள் இருவரும் (இந்தியா சீனா) இருவரும் தங்களுக்கு வேண்டிய நல்லது கெட்டது பற்றி பேசின. இது நிச்சயம் வரவேற்க தக்க விஷயம்.

என்ன கருவி அது?.. கோவளம் பீச்சை மோடி சுத்தம் செய்த போது இதை கவனித்தீர்களா? அவரே கொடுத்த விளக்கம்!என்ன கருவி அது?.. கோவளம் பீச்சை மோடி சுத்தம் செய்த போது இதை கவனித்தீர்களா? அவரே கொடுத்த விளக்கம்!

7வது இடத்தில் இந்தியா

7வது இடத்தில் இந்தியா

பொதுவாகவே சீனா உலக அளவில் மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கிறது. இருப்பினும் சீனா தான் உலகின் மிகப்பெரிய பரப்பளவையும் கொண்டுள்ளது. ஒற்றை மொழி, ஒற்றை கட்சி தேர்தல் என வித்தியாசமான கம்யூனிச நாடு சீனா. ஆனால் இந்தியாவோ மக்கள் தொகையில் இரண்டாவது இடத்திலும் பரப்பளவில் 7வது இடத்திலும் உள்ள நாடு. இங்கு பல மொழி, பல இனம், பல கலாச்சாரம், பல கட்சி என வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு இந்தியா.

இந்தியா அடித்தளம்

இந்தியா அடித்தளம்

மேலே உள்ள தகவல் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், இதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் வலிமையை தீர்மானிக்க கூடியவை. மேலே உள்ள காரணங்களால் சீனா நம்மைவிட பொருளாதாரத்தில் மும்முடங்கு வலிமையுடன் உள்ளது. ஆனால் இந்தியா அப்படி இல்லை. இப்போது தான் அடித்தளத்தை போட்டு வருகிறது.

வர்த்த போர்

வர்த்த போர்

கடந்த இரண்டு நாள் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை எதற்காக நடத்தப்பட்டது என்றால் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவை வலிமையடைய வைப்பது, இருநாடுகளுக்கும் இடையே நிலவும் எல்லைப்பிரச்னைகள் குறித்த பேச்சும் நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் தொடர்பான விஷயங்களேஅதிகம் இடம் பெற்று இருக்கும். ஏனெனில் அமெரிக்கா சீனா இடையில் வர்த்தக போர் நிலவி வருவதால் இந்தியாவுடன் உறவை பலப்படுத்தி, அமெரிக்காவில் விட்டதை இந்தியாவில் சீனா பிடிக்க விரும்புகிறதா என்ற கேள்விகள் எழுகிறது.

 சரியாக பயன்படுத்தனும்

சரியாக பயன்படுத்தனும்

அமெரிக்காவில் வரிகள் அதிகம் விதிக்கப்படுவதால் இந்தியாவில் தனது சந்தையை சீனா இன்னும் அதிகப்படியாக விரிவுப்படுத்த விரும்பலாம். ஆனால் அதேநேரம் அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போரை இந்தியா சரியாக பயன்படுத்தி சீனாவில் தனது சந்தையை விரிவுப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். அதற்கான அடித்தளமும் நேற்று போடப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியாவுக்கு வாங்க

இந்தியாவுக்கு வாங்க

நமக்கு வேண்டியது சீனாவில் மலிவு விலையில் கிடைக்கிறது என மொத்தமாக வாங்காமல், சீன தொழில் அதிபர்களை இங்கு தொழில் தொடங்க வைத்து, இங்கிருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்நிலை உருவாக்கப்பட வேண்டும். உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் நாம், சீனாவுக்கு தேவையான பல்வேறு தொழில்நுட்பங்களையும் ஏற்றுமதி செய்யும் நிலைக்கு மாற வேண்டும். சீனா அபரிமிதமான மனித வளம் மிகுந்த நாடு. அந்த நாட்டிற்கு தேவையானவற்றை நம்மிடம் இருந்து வாங்கும் நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதற்கு ஏற்றுமதி குறித்த புரிதல்களை அரசு சாமானியர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்.

English summary
china us trade war: what china expect from india, what india expect from china
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X