For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

50 வீரர்கள் உள்ளே இருப்பார்கள்.. பாங்காங் திசோவில் சீனா வைக்கும் பகீர் கோரிக்கை.. மறுத்த இந்தியா!

Google Oneindia Tamil News

லடாக்: லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோ பகுதியில் 50 வீரர்களை குவிக்க வேண்டும் என்று சீனா கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இங்கிருந்து சீனா மொத்தமாக படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று இந்திய தரப்பு கூறியுள்ளது.

லடாக் மோதல் தற்போது நெருப்பு இல்லாத பூகையாக மாறியுள்ளது. எல்லையில் வெளிப்படையாக மோதல் இல்லை என்றாலும், இந்தியா - சீனா இடையே உரசல் நிலவி வருகிறது. இது மோதலாக மாறுவதற்கு முன் எல்லையில் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் முடிவு செய்துள்ளது.

இதற்காக லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகள் வரும் வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்கு முன் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

 எல்லையில் சீனா தொல்லை.. மீண்டும் இந்தியா-சீன ராணுவ மட்ட பேச்சுவார்த்தை எல்லையில் சீனா தொல்லை.. மீண்டும் இந்தியா-சீன ராணுவ மட்ட பேச்சுவார்த்தை

கட்டுப்பாடு எங்கே

கட்டுப்பாடு எங்கே

லடாக்கில் பாங்காங் திசோவில் இருந்து முழுமையாக படைகளை வாபஸ் வாங்க சீனா மறுத்து வருகிறது. இங்குதான் பதற்றம் அதிகமாக உள்ளது. இங்கு மொத்தம் 8 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது. இதில் முதல் 4 பகுதிகள் இந்தியா வசமும், கடைசி நான்கு பகுதிகள் சீனா வசமும் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் இரண்டு கட்டுப்பாட்டு பகுதிகளை சீனா உள்ளே புகுந்து கட்டுப்படுத்தி வருகிறது.

கட்டுப்படுத்தி வருகிறது

கட்டுப்படுத்தி வருகிறது

இந்த இடத்தில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்க மறுக்கிறது. இங்கு இருக்கும் 8 கிமீ ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்க மறுத்துவிட்டது. இங்கு குறைந்தது 50 வீரர்களாவது இருப்பார்கள். முழுமையாக படைகளை வாபஸ் வாங்க முடியாது என்று சீனா அறிவித்துவிட்டது. இதுதான் எல்லையில் பிரச்சனை இன்னும் நீடிக்க முக்கிய காரணமாக உள்ளது.

கேமரா வேண்டும்

கேமரா வேண்டும்

அதேபோல் இந்திய வீரர்களை கண்காணிக்கும் வகையில் இங்கே கேமரா பொருத்தவும் சீனா கோரிக்கை வைத்துள்ளது. இந்திய எல்லைக்கு உள்ளே புகுந்து, கேமரா வைக்க சீனா கோரிக்கை வைத்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த இடங்களை கைப்பற்றும் வகையில் சீனா இப்போதே இந்த இடங்களை குறி வைத்து உள்ளது. ஆனால் இந்தியா இதை கொஞ்சம் கூட ஏற்கவில்லை.

முழுக்க முழுக்க மறுப்பு

முழுக்க முழுக்க மறுப்பு

இந்தியா இதை மொத்தமாக மறுத்துள்ளது.நீங்கள் ஆக்கிரமித்து இருப்பது இந்தியாவிற்கு சொந்தமான பகுதி. இங்கிருந்து நீங்கள் மொத்தமாக வெளியேற வேண்டும். இதைவிட வேறு பேச்சே இல்லை என்று இந்தியா அதிரடியாக கூறிவிட்டது. இதனால் வரும் வாரம் லடாக் தொடர்பாக நடக்கும் பேச்சுவார்த்தை எந்த திசையில் செல்லும், இதில் அமைதி எட்டப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

என்ன காரணங்கள்

என்ன காரணங்கள்

எல்லையில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே இந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படும். பின்வரும் விஷயங்கள் இந்த பேச்சுவார்த்தையில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

1. லடாக்கில் பாங்காங்க் திசோ மற்றும் மற்றும் அக்சய் சின் பகுதியில் சீனா இன்னும் படைகளை வாபஸ் வாங்கவில்லை. மாறாக அங்கு போருக்கு தயார் ஆவது தயார் ஆக வருகிறது.

2. எல்லையில் இதுவரை நடத்திய பேச்சுவார்த்தை எதையும் சீனா மதிக்கவில்லை. எந்த பேச்சுவார்த்தையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படியும் சீனா எல்லையில் படைகளை வாபஸ் வாங்கவில்லை. இதனால் இனியும் பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை.

3. பாங்காங் திசோ வடக்கு பகுதியை சீனா ஆக்கிரமித்தது. இதனால் பாங்காங் திசோவின் தெற்கு பகுதியை இந்தியா பிடித்தது. ஆகவே தற்போது லடாக்கில் புதிய இடங்களை சீனா ஆக்கிரமிக்க திட்டமிட்டு வரலாம் என்று அச்சம் நிலவுகிறது. இது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையில் ஆலோசனை செய்யப்படும்.

English summary
China wants to deploy atleast 50 soldiers in border near Pangong Tso, India says NO to PLA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X