For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: பெண் தோழிகளுடன் விருந்துக்கு செல்வதை எதிர்த்து கேள்வி கேட்ட மனைவி மற்றும் தந்தையை கொலை செய்தவரை போலீசார் கொலை நடந்த 24 மணி நேரத்தில் கைது செய்தனர். சாவியை வைத்துக்கொண்டே பக்கத்து வீட்டில் ஏணி வாங்கி வீட்டுக்குள் சென்றதாலும், சட்டைப்பையில் இருந்த இரத்தக்கரையாலும் போலீசிடம் வசமாக சிக்கியுள்ளார் 62 வயது கொலையாளி லீ.

சீன வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர் லீ வான் தோ (62 வயது). இவர் தனது மனைவி மற்றும் தந்தையுடன் கொல்கத்தாவில் உள்ள சீனா டவுன் பகுதியில் வசித்து வந்தார். இவர் நேற்று இரவு வெளியே சென்ற நேரத்தில் லீயின் மனைவி மற்றும் லீயின் 90 வயது தந்தை ஆகியோர் படுகாயங்களுடன் கிடந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லீ காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு லீயின் மனைவி மற்றும் அவரின் தந்தை உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

துப்பு இல்லை

துப்பு இல்லை

இந்த இரட்டைக்கொலை தொடர்பாக கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வீட்டில் கொள்ளை முயற்சி நடந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை. வீட்டில் இருந்த பொருள் இருந்த இடத்தில் அப்படியே இருந்தது. இதனால் லீயின் வீட்டைச் சுற்றி உள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் எந்து துப்பும் கிடைக்கவில்லை.

செல்போனை எடுக்காத மனைவி

செல்போனை எடுக்காத மனைவி

அதேநேரம் லீயிடம் போலீசார் எப்போது உடலை பார்த்தீர்கள் என்று கேட்ட போது. லீ அப்போது அவர்களிடம் கூறும் போது, நேற்று இரவு வெளியில் சென்றுவிட்டு 8.30 மணியளவில் வீடு திரும்பினேன். வீட்டின் நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்ததால் தொலைபேசி மூலம் என் மனைவியைத் தொடர்புகொண்டேன். ஆனால், செல்போன் ரிங் ஆனதே தவிர போனை அவர் எடுக்கவில்லை. இதையடுத்து பக்கத்து வீட்டில் இருந்தவர்களிடம் ஏணியை வாங்கி அதன்மூலம் வீட்டுச் சுவரில் ஏறிக்குதித்து உள்ளே சென்று பார்த்தேன். அங்கு எனது மனைவி மற்றும் தந்தை பயங்கர காயங்களுடன் வீட்டுக்குள் மயங்கி கிடந்தனர். நான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். என்றார்.

பாக்கெட்டில் வீட்டு சாவி

பாக்கெட்டில் வீட்டு சாவி

அப்போது லீயிடம் போலீசார் சட்ட பையில் ரத்தக்கரை உள்ளதே என்று கேட்டனர். அதற்கு அவர்களை தூக்கும் போது இரத்தம் ஒட்டிக்கொண்டது என்றார். அப்போது அங்கிருந்த ஒருவர் மனைவி மற்றும் தந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது லீ தனது பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்து கதவை திறந்தாக காவல்துறையினரிடம் கூறினார்.

கொலை செய்ததை லீ ஒப்புதல்

கொலை செய்ததை லீ ஒப்புதல்

இதையடுத்து பாக்கெட்டில் சாவியை வைத்திருந்த நீங்கள் எதற்காக உறவினர்களிடம் ஏணியை வாங்கி அதன்மூலம் வீட்டுக்குள் வர வேண்டும் என்று லீயிம் துருவி துருவி விசாரித்தனர். அத்துடன் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் லீ தனது வீட்டிலிருந்து 7 மணியளவில் பயந்து பயந்து வெளியே வந்துள்ளார். அப்போத அவரது சட்டையில் ரத்தக் கறை சுவடுகள் இருப்பதையும் காவல்துறையினர் கவனித்தனர். இதைத் தொடர்ந்து, லீயிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில் லீ கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

தடுத்ததால் தாக்கினேன்

தடுத்ததால் தாக்கினேன்

இது தொடர்பாக வாக்கு மூலம் அளித்த லீ, நண்பர்களுடன் இரவு விருந்துக்குச் செல்வதாக என் மனைவியிடம் கூறினேன். ஆனால் என் மனைவியோ பெண் தோழிகளுடன் விருந்துக்கு செல்கிறீர்களா எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து பக்கெட்டை எடுத்து மனைவியின் முகத்தில் கடுமையாகத் தாக்கினேன் இந்தத் தாக்குதலில் மயங்கி கீழே விழுந்துவிட்டார். சத்தம் கேட்டு எனது 90 வயது தந்தை வந்தார். கோபத்தில் இருந்த நான் அவரையும் தாக்கினேன் பின்னர் வெளியே வந்தேன். 8.20 மணியளவில் வீடு திரும்பிய வீடு பூட்டியிருப்பது போன்று டிராமா செய்தேன். எனது பாக்கெட்டில் சாவியை வைத்துக்கொண்டு சுவர் ஏறி குதித்தால் மாட்டிக்கொண்டுள்ளேன்" இவ்வாறு கூறியுள்ளார் இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

English summary
Chinese-Origin Man killed his wife and father, kolkata police identified accused within 24 hours
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X