For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லடாக்கில் 3 கி.மீ. தொலைவுக்குள் ஊடுருவி முகாமிட்டிருக்கிறது சீனாவின் படைகள்?

Google Oneindia Tamil News

ஶ்ரீநகர்: லடாக் எல்லையில் நமது தேசத்துக்குள் 3 கி.மீ. தொலைவுக்கு சீனாவின் படைகள் ஊருவி முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    எல்லையில் 3 கி.மீ. தொலைவுக்குள் ஊடுருவிய சீன ராணுவம் ? | Oneindia Tamil

    பூட்டானின் டோக்லாமை கைப்பற்றுவதற்காக 2017-ம் ஆண்டு சீனா முயற்சித்தது. டோக்லாமை கைப்பற்றுவதன் மூலம் வடகிழக்கு இந்தியாவுக்கு செக் வைக்க முடியும் என்பது சீனாவின் கனவு.

    Chinese troops crossed 3 km into India?

    ஆனால் சீனாவின் ஊடுருவலை 73 நாட்கள் எதிர்கொண்டு நின்று முறியடித்தது இந்தியா. இதனால் டோக்லாமை கைப்பற்றிவிடலாம் என்கிற சீனாவின் கனவு தகர்ந்து தவிடு பொடியானது.

    தற்போது உலகமே சீனா பரப்பிவிட்ட கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றன. சீனாவின் கொரோனாவால் பல லட்சம் மனித உயிர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளன. இதனை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் நாடு பிடிக்கும் ஆசையில் மீண்டும் எல்லையில் வாலாட்ட தொடங்கியிருக்கிறது சீனப் படைகள்.

    என்ன நடக்குது எல்லையில்.. போர் தொடுக்குமா சீனா.. பரபர தகவல்கள் என்ன நடக்குது எல்லையில்.. போர் தொடுக்குமா சீனா.. பரபர தகவல்கள்

    இப்போது சீனா குறிவைத்திருப்பது லடாக் எல்லைகள். லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாங்கோங் டிசோ, தவுலவத் பெக் ஓல்டி மற்றும் கால்வன் பள்ளத்தாக்கு இவைதான் இப்போது சீனாவின் இலக்குகளாக இருக்கின்றன. இதனால் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் படைகளை குவிக்கின்றோம் என்ற போர்வையில் பிரச்சனைக்குரிய இந்திய பகுதிகளுக்குள் ஊடுருவலை நடத்திக் கொண்டிருக்கிறது சீனா.

    இப்படித்தான் இந்திய நிலப்பரப்பில் 3 கி.மீ. தொலைவுக்கு சீனா ஊடுருவி இருக்கிறது என்கின்றன ராணுவ வட்டாரங்கள்.

    English summary
    Sources said that the Chinese troops crossed 3 km into Indian side.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X