For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய எல்லைக்குள் சீனா மீண்டும் ஊடுருவல்

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லையில் சீன படையினர் மீண்டும் ஊடுருவி முகாம் போட்டு தங்கியுள்ளனர்.

காஷ்மீர் எல்லைப்பகுதியான தவுலத் பெக் ஒல்டி பகுதிக்குள் கடந்த ஏப்ரல் மாதம் சீன படைகள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்தன. சுமார் 19 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவிய அவர்கள் கூடாரங்கள் அமைத்து, சீன கொடிகளையும் நாட்டினர்.

பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் அவர்கள் இடத்தை காலி செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் சீன படைகள் மீண்டும் காஷ்மீரின் லடாக் எல்லையில் உள்ள செப்சி பகுதியில் ஊடுருவி முகாமிட்டுள்ளனர்.

கடந்த வாரம் 22 சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து 10 கூடாரங்களை அமைத்து, சீன கொடிகளையும் நாட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

English summary
In yet another face-off with Indian Army similar to the one in Ladakh, Chinese troops reportedly intruded again in same area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X