For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிர் கொல்லி கொரோனா வைரஸுக்கு மத்தியில் மலர்ந்த காதல்.. சீன பெண்ணை கரம் பிடித்த இந்திய இளைஞர்

Google Oneindia Tamil News

Recommended Video

    காய்ச்சல் அடிச்சதால் விட்டுட்டு போயிட்டீங்களே.. எனக்கு கல்யாணம்ங்க.. சீனாவில் கதறும் ஆந்திர பெண் - வீடியோ

    போபால்: கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் சீன நாட்டு பெண்ணை காதலித்து இந்திய இளைஞர் ஒருவர் கரம் பிடித்துள்ளார்.

    சீனாவில் வுகான் மாகாணத்தில் ஒரு மீன் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் என்ற வைரஸ் நோய் கடந்த டிசம்பர் மாதம் முதல் அந்நாட்டு மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அந்த நோய் இந்தியா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட 25 நாடுகளில் பரவியுள்ளது.

    இந்த நோய்க்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் நோய் தீவிரம் அடைந்தால் உயிர் பலி ஏற்படுவது அபாயம் என்பதால் இந்த வைரஸ் நோயை உயிர் கொல்லி என்றும் கூறுகின்றனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்காததால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளன.

    உள்ளே வர கூடாது.. 3500 பேருடன் நடுக்கடலில் நிறுத்தப்பட்ட கப்பல்.. கொரோனாவால் ஜப்பானில் பகீர்! உள்ளே வர கூடாது.. 3500 பேருடன் நடுக்கடலில் நிறுத்தப்பட்ட கப்பல்.. கொரோனாவால் ஜப்பானில் பகீர்!

    இளைஞர்

    இளைஞர்

    இதுவரை சீனாவில் கொரோனா வைரஸுக்கு 425 பேர் பலியாகிவிட்டனர். சீனாவில் பணி நிமித்தமாகவும் கல்விக்காகவும் மற்ற நாடுகளில் இருந்து சென்றுள்ளோர் அவசர அவசரமாக சீனாவை விட்டு வெளியேறும் நிலை உள்ளது. அந்த நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் சீன பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம்

    திருமணம்

    மத்திய பிரதேசத்தை சேர்நதவர் சத்யார்த் மிஸ்ரா. இவர் கனடா நாட்டில் படிக்கும் போது இவருக்கும் சீனாவை சேர்ந்த ஜிஹாவோ வாங்கிற்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோரிடம் தங்கள் காதலை கூறி திருமணம் செய்ய முடிவு முடிவு செய்துள்ளதாக கூறினர். இதையடுத்து ஜிஹாவோ வாங், அவரது தந்தை சிபோ வாங், தாய் ஜின் குவான் உள்ளிட்டோர் மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்சார் நகருக்கு வந்தனர்.

    இந்திய முறை

    இந்திய முறை

    அவர்களுக்கு அந்த மாநில சுகாதாரத் துறை மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் இவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து நேற்று முன் தினம் மாண்ட்சாரில் சத்யார்த் மிஸ்ராவுக்கும் ஜிஹாவோ வாங்கிற்கும் திருமணம் நடைபெற்றது. இந்திய முறைப்படி ஜிஹாவோவிற்கு தாலி கட்டினார்.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    இதுகுறித்து மணமக்கள் கூறுகையில் நாங்கள் இருவரும் கனடாவில் ஒரு கல்லூரியில் சந்தித்தோம். 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கொண்டோம். எனது திருமணத்திற்கு இன்னும் 4 உறவினர்கள் வரவிருந்தனர். ஆனால் கொரோனாவினால் விசா பிரச்சினை இருந்ததால் அவர்களால் வர இயலவில்லை என்றனர்.

    English summary
    Madhya Pradesh man and Chinese Woman weds in Mandsaur amid Corona virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X