For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீன அதிபரின் உத்தரவை மீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவிய 1,000 சீன ராணுவத்தினர்: வெளியேற மறுப்பு

By Siva
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஒரு வாரத்தில் மட்டும் சீன ராணுவத்தைச் சேர்ந்த 1,000 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளனர். சீன ராணுவம் இந்தியாவுக்குள் ஊடுருவி வருகிறது. சீன ராணுவத்தின் மக்கள் விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் உள்ள சுமாரில் ஊடுருவி வருகின்றனர். லடாக்கின் வடகிழக்கு பகுதியில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ளது சுமார். சுமார் பகுதியில் சீன ராணுவத்தின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

சுமார்

சுமார்

சுமாரில் ஏற்கனவே 35க்கும் மேற்ற சீன ராணுவத்தினர் முகாமிட்டுள்ள நிலையில் சனிக்கிழமை மேலும் 50 பேர் 9 வாகனங்களில் வந்திறங்கினர். அவர்கள் இந்திய ராணுவம் முகாம் கொண்டுள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் உள்ளனர்.

ஒரு வாரத்தில்

ஒரு வாரத்தில்

இந்த ஒரு வாரத்தில் மட்டும் சீன ராணுவத்தினர் 1,000 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்த லடாக் பகுதியில் 1,500 ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர்.

முகாம்

முகாம்

முன்னதாக அரை மணிநேரம் இந்தியாவுக்குள் ஊடுருவிவிட்டு திரும்பிச் சென்ற சீன ராணுவம் தற்போது சுமார் பகுதியில் முகாமிட்டு சாலை அமைக்கும் பணிகளை துவங்கியுள்ளது.

ஜின்பிங்

ஜின்பிங்

கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்த சீன அதிபர் ஜின்பிங் சீன ராணுவம் இந்தியாவுக்குள் ஊடுருவாது என்று பிரதமர் மோடியிடம் வாக்குறுதி அளித்தார். மேலும் இந்தியாவுக்குள் ஊடுருவிய சீன ராணுவத்தினரை திரும்பச் செல்லுமாறு அவர் உத்தரவிட்டார்.

சீன ராணுவம்

சீன ராணுவம்

சீன ராணுவமோ ஜின்பிங்கின் உத்தரவை காதில் வாங்காமல் மேலும் படைகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைத்துள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா கூறி வருவதையும் சீனா கண்டுகொள்ளவில்லை.

English summary
The standoff in Chumar region in Ladakh worsened on Saturday after a second intrusion by Chinese army personnel in two days was reported at another point after they had withdrawn from the same area. 1,000 Chinese army personnel have intruded in this week alone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X