For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரு குண்டுவெடிப்பு: பாட்னாவில் சிக்கிய 2 சிமி தீவிரவாதிகளிடம் விசாரணை

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரு சர்ச் தெரு குண்டுவெடிப்பு தொடர்பாக பாட்னாவைச் சேர்ந்த 2 சிமி தீவிரவாதிகளிடம் பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.

பீகாரின் பாட்னா மற்றும் புத்தகயா குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக சிமி இயக்கத்தைச் சேர்ந்த ஹைதர் அலி மற்றும் ரியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு பெங்களூரு சர்ச் தெருவில் நடந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

Church Street blast: 2 SIMI members from Patna being questioned

இதனைத் தொடர்ந்து இருவரையும் பெங்களூரு கொண்டு வந்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் பாட்னா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து பெங்களூரு போலீசார் வாரண்ட் பெற்றுள்ளனர். இருவரும் பெங்களூரு கொண்டு வந்து விசாரிக்கப்பட இருக்கின்றனர்.

பாட்னாவில் பிரதமர் மோடியின் பேரணியில் குண்டு வெடித்த சம்பவத்தில் இந்த இருவருக்கும் தொடர்பிருப்பதால் முதலில் கைது செய்யப்பட்டனர். பின்னர் புத்தகயா குண்டுவெடிப்பிலும் இருவருக்கும் தொடர்பிருப்பதும் தெரியவந்தது.

பாட்னா, புத்தகயா குண்டுவெடிப்பு சம்பவங்களில் பயன்படுத்த வெடிபொருட்களும் பெங்களூரு குண்டுவெடிப்புக்கான வெடிபொருட்களும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த இருவரிடமும் பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.

English summary
The Bengaluru police will bring down two suspects for questioning in connection with the Church Street blasts. The two persons Haider Ali and Riyaz had been arrested in connection with the Patna serial blasts and the Bodhgaya blasts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X