For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு

Google Oneindia Tamil News

கொல்கத்தா: வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக போராட்டம் வலுத்துள்ளது. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் லால்கோலா ரயில் நிலையத்தில் பயணிகள் இன்றி நிறுத்தப்பட்டிருந்த ஐந்து ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன.

அசாம் மாநிலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடினர். இதை ஒடுக்க போலீஸ் பிரயோகித்த, துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

Citizenship Act protest: 5 empty trains set on fire in West Bengal

பிற வடகிழக்கு மாநிலங்களில் நிலைமை பெரும்பாலும் அமைதியானதாக உள்ளது. முக்கிய பகுதிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் லேசாக தளர்த்தப்பட்டன.

இன்று காலை ஹவுராவில் உள்ள சங்க்ரயில் ரயில் நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும், நூற்றுக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ரயில் நிலைய வளாகத்தின் ஒரு பகுதியை தீ வைத்தனர்.

"பிற்பகலில், அவர்கள் ரயில் நிலைய வளாகத்திற்குள் நுழைந்து டிக்கெட் கவுண்டருக்கு தீ வைத்தனர். ஆர்.பி.எஃப் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அவர்களைத் தடுக்க முயன்றபோது, ​​அவர்கள் தாக்கப்பட்டனர்" என்று ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான பி.டி.ஐ.யிடம் தெரிவித்தார்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள போரடங்கா, ஜாங்கிபூர் மற்றும் ஃபாரக்கா நிலையங்கள் மற்றும் ஹவுரா மாவட்டத்தில் பவுரியா மற்றும் நல்பூர் நிலையங்களில் போராட்டக்காரர்கள் திரண்டதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தி அப்படி பேசக்கூடாது.. பாஜக மாதிரியே கொந்தளிக்கும் சிவ சேனா.. சரியா போச்சு!ராகுல் காந்தி அப்படி பேசக்கூடாது.. பாஜக மாதிரியே கொந்தளிக்கும் சிவ சேனா.. சரியா போச்சு!

மூன்று மாநில பேருந்துகள் உட்பட பதினைந்து பேருந்துகளில் பயணிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றிய போராட்டக்காரர்கள் பின்னர் அவற்றுக்கு தீ வைத்து தங்கள் எதிர்ப்பை காட்டினர்.

வடக்கு மற்றும் தெற்கு வங்காளத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 34 முடக்கப்பட்டுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜகதீப் தங்கர் இருவரும், மக்களை அமைதிகாக்க வலியுறுத்திய போதிலும் போராட்டங்கள் தொடர்கின்றன.

"சாலை போக்குவரத்து மற்றும் ரயில்களைத் தடுக்காதீர்கள். சாதாரண மக்களைத் துன்புறுத்துவது பொறுத்துக் கொள்ளப்படாது. சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வோர் தப்பிக்க முடியாது. பேருந்துகளுக்கு தீ வைப்பவர்கள், ரயில்கள் சேவையை தடுபபோர் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்," என்று மமதா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத்தை "எந்த சூழ்நிலையிலும்" தனது மாநிலத்தில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்றும் மமதா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

English summary
Later in the afternoon, they entered the station complex and set the ticket counter on fire. When RPF and railway personnel tried to stop them, they were beaten up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X