For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொத்து கொத்தாக குவிக்கப்படும் ராணுவம்.. களத்தில் போராடும் மக்கள்.. இன்னொரு காஷ்மீராகும் வடகிழக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு ... அஸ்ஸாம், திரிபுராவில் ராணுவம் குவிப்பு

    கொல்கத்தா: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் அழகிய 7 சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்கள்தான் அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, அருண்சலப்பிரதேசம். இந்த 7 மாநிலங்களும் தற்போது போராட்டத்தால் தீ பற்றி எரிந்து வருகிறது.

    ஆம் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை இவர்கள் மிக கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இந்த மசோதாவை திரும்ப பெறும் வகையில் நாங்கள் ஓய மாட்டோம் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு.. ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா... மக்களுக்கு வேண்டுகோள் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு.. ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா... மக்களுக்கு வேண்டுகோள்

    எங்கு எல்லாம்

    எங்கு எல்லாம்

    அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, அருண்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த போராட்டம் நடக்கிறது. அருண்சலப்பிரதேசத்தில் குறைவாக போராட்டம் நடக்கிறது. அங்கு இந்த சட்டம் அமலுக்கு வராது. அதனால் அங்குள்ள மக்கள் பெரிய அளவில் போராட்டம் செய்யவில்லை.

    மிக மோசமான போராட்டம்

    மிக மோசமான போராட்டம்

    மற்ற ஆறு மாநிலங்களிலும் மிக மோசமாக போராட்டம் நடந்து வருகிறது.வடகிழக்கு மாநில மாணவர்கள் அமைப்பு சார்பாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநில மாணவர்கள் அமைப்புதான் இதில் முன்னிலை வகிக்கிறது. இவர்களுக்கு ஏஐயுடிஎஓ, அனைத்து அசாம் மாணவர் சங்கம், கிர்சாக் முக்தி சங்கரம் சமிதி, அருனாச்சல பிரதேச மாணவர் சங்கம், நாகா மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

    மக்கள் ஆதரவு

    மக்கள் ஆதரவு

    இந்த போராட்டத்திற்கு அம்மாநில மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். அரசு ஊழியர்கள் ஆதரவு அளித்துள்ளனர். தலைமை செயலக ஊழியர்கள் ஆதரவு அளித்துள்ளனர். 11 மணி நேரத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட போராட்டம் 3 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது.

    வேறு அமைப்புகள்

    வேறு அமைப்புகள்

    அதேபோல் இடதுசாரி அமைப்புகளான எஸ்எப்ஐ, டிஒய்அப்ஐ, ஏஐடிடபிள்யுஏ, ஏஐஎஸ்எப், ஐபிடிஏ ஆகிய அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதனால் நாங்கள் முதற்கட்டமாக 11 மணி நேரம் இந்த போராட்டத்தை நடத்துவோம். அதன்பின் தொடர்ந்து போராடுவோம்.

    ராணுவம் குவிப்பு

    ராணுவம் குவிப்பு

    இந்த போராட்டத்தை முடக்குவதற்காக தற்போது இங்கு ராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் காஷ்மீரில் இருந்து இந்த ராணுவம் வரவழைக்கப்பட்டு உள்ளது. ஆம் காஷ்மீரில் கொஞ்சம் அமைதி திரும்பி உள்ள நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இப்போதும் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.

    என்ன கட்டுப்பாடு

    என்ன கட்டுப்பாடு

    இந்த போராட்டம் காரணமாக மணிப்போர், அசாம், மேகலாயா, நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய ஆறு மாநிலங்களில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு , கல்லூரிகள் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேச மக்கள் ஆக்கிரமிப்பு செய்வார்கள் என்பதுதான் இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் வங்கதேசத்துடன் உறவு மொத்தமாக பாதிக்கப்படும். இதனால் வங்கதேசத்தில் இருந்து அதிக அளவில் அகதிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு வருவார்கள்.

    இணையம் முடக்கம்

    இணையம் முடக்கம்

    இந்த போராட்டம் காரணமாக மொத்தமாக அங்கு இணையம் முடக்கப்பட்டுள்ளது. அருணாசலப்பிரதேசம் தவிர மற்ற 6 மாநிலங்களில் இணையம் முடக்கப்பட்டுள்ளது. கவுஹாத்தி மொத்தமாக இயல்பு நிலையை இழந்து சிக்கி தவிக்கிறது. கிட்டத்தட்ட இன்னொரு காஷ்மீர் போல வடகிழக்கு மாநிலங்கள் மாறியுள்ளது.

    English summary
    Citizenship Amendment Bill: Huge protests and curfew creates almost a new Kashmir in Northeast
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X