For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

30 வருடத்திற்கு பின் மாஸ் போராட்டம்.. குடியுரிமை சட்ட திருத்தத்தை வடகிழக்கு எதிர்ப்பது ஏன் தெரியுமா?

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வடகிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வடகிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. தீர்க்க முடியாத வரலாற்று பிரச்சனைகள் இதற்கு பின் இருப்பதாக கூறுகிறார்கள்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நேற்று முதல் நாளில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு சில இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது.

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது.

வடகிழக்கு மாநிலங்களில் இனச்சுத்திகரிப்பு முயற்சிதான் குடியுரிமை மசோதா: ராகுல் அட்டாக் வடகிழக்கு மாநிலங்களில் இனச்சுத்திகரிப்பு முயற்சிதான் குடியுரிமை மசோதா: ராகுல் அட்டாக்

என்ன காரணம்

என்ன காரணம்

வடகிழக்கு மாநில மக்கள் இதை எதிர்க்க பின் வரும் காரணங்கள் இருக்கிறது. அதன்படி,

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் குடியேறி இருக்கும் மக்களை வடகிழக்கு மாநில மக்கள் எதிர்த்து வருகிறார்கள். எந்த மதமாக இருந்தாலும் அவர்களை ஏற்க முடியாது என்று அம்மக்கள் கூறி வருகிறார்கள். அதாவது வங்கதேசத்தில் இருந்து குடியேறும் மக்கள் இந்து, முஸ்லீம் என்று யாராக இருந்தாலும் ஏற்க முடியாது என்று வடகிழக்கு மாநில மக்கள் கூறியுள்ளனர்.

மசோதாவில் உள்ள சிக்கல்

மசோதாவில் உள்ள சிக்கல்

இதுதான் அவர்கள் இந்த மசோதாவை ஏற்க முக்கிய காரணம்.இந்த சட்டம் வந்தால் வங்கதேசத்தில் இருக்கும் இந்துக்கள் இந்தியாவில் குடியேறி 6 வருடங்களில் குடியுரிமை பெறுவார்கள். இதனால் தங்களின் கலாச்சாரம், வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று வடகிழக்கு மாநில மக்கள் கருதுகிறார்கள்.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கனவே வேலைவாய்ப்பு குறைவாக இருக்கிறது. வங்கதேச மக்கள் இந்தியாவில் குடியேறினால் இது மேலும் பாதிக்கப்படும். வடகிழக்கு மாநிலங்களின் இயல்பே இதனால் பாதிப்படும் அபாயம் உள்ளது. இலங்கையை சேர்ந்த சிங்கள மக்கள் தமிழகத்தில் மொத்தமாக குடியேறினால், அவர்கள் சிங்களம் மட்டுமே பேசினால், எப்படி இருக்குமோ அப்படித்தான் இதுவும்.

மொழி எப்படி

மொழி எப்படி

அதேபோல் பங்களா மொழி தங்கள் வடகிழக்கு மாநில மொழியை அழித்து வருகிறது என்றும் அம்மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பல இடங்களில் வங்கதேசத்தை சேர்ந்த மொழியும்,உருதும்தான் சமீப நாட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அசாமி பேசும் மக்கள் மற்றும் பங்களா மொழி பேசும் மக்கள் இடையே கடும் பிரச்சனை நிலவி வருகிறது.

பாஜக வெளிநாடு

பாஜக வெளிநாடு

அதே சமயம் இன்னொரு பக்கம் பாஜக இந்த வெளிநாட்டு இந்துக்களை வாக்கு வங்கியாக பார்க்கிறது. வங்கதேசத்தில் இருந்து இவர்கள் இந்தியாவிற்கு வந்து குடியேறினால், கண்டிப்பாக பாஜகவிற்கு வாக்களிப்பார்கள். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக எளிதாக வெற்றிபெற முடியும் என்று கருதப்படுகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

இதுதான் பாஜக இந்த சட்டத்தை கொண்டு வர மிக முக்கிய காரணம். வடகிழக்கு மக்கள் தங்கள் கலாச்சாரமும் வேலை வாய்ப்பும், நிலமும் பறிபோக கூடாது என்று தீவிரமாக போராடி வருகிறார்கள். 1988 களில் நடந்த வடகிழக்கு மாநில போராட்டத்தை விட இப்போது நடக்கும் போராட்டம் மிகவும் வலிமையானது. இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் கூறுகிறார்கள் .

English summary
Citizenship Amendment: Why Northeast is opposing the Bill? - Here is the full reason.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X