For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாட்டுக் கறியை தொடர்ந்து நாய் கறி.. அதெப்படி தடை விதிக்கலாம்? நாகாலாந்தில் வெடிக்கும் உரிமை குரல்

Google Oneindia Tamil News

கோஹிமா: நாகாலாந்தில் நாய் கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

Recommended Video

    நாய் இறைச்சிக்கு தடை விதித்த நாகலாந்து

    இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது அவ்வப்போது சர்ச்சையாவது வழக்கம். இதேபோல்தான் வடகிழக்கு மாநிலங்களில் நாய்கறி விவகாரமும்.

    வடகிழக்கு இந்தியாவில் குறிப்பாக நாகாலாந்தில்தான் நாய் கறி அமோகமாக விற்பனையாகும். நாகாலாந்தின் கோஹிமாவில் அசைவ ஹோட்டல்களில் நாய்கறிதான் ஸ்பெஷல் அயிட்டமாக போர்டுகளில் எழுதி போட்டிருப்பார்கள்.

    இன்றைய சூழ்நிலைகளுக்கேற்ப ஐக்கிய நாடுகள் சபையை சீரமைக்க வேண்டும்: பிரதமர் மோடிஇன்றைய சூழ்நிலைகளுக்கேற்ப ஐக்கிய நாடுகள் சபையை சீரமைக்க வேண்டும்: பிரதமர் மோடி

    கோஹிமா நாய்கறி சந்தை

    கோஹிமா நாய்கறி சந்தை

    கோஹிமாவின் நாய்கறி சந்தையை நெஞ்சை பிடித்துக் கொண்டு பிற மாநிலத்தவர் அதிர்ச்சியுடன் பார்த்துவிட்டு தலைதெறிக்க ஓடுவார்கள். ஏனெனில் நாயை இறைச்சிக்காக கொல்வதில் அப்படி ஒரு குரூரத்தை பார்க்கவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

    நாய் கடத்தல் குற்றங்கள்

    நாய் கடத்தல் குற்றங்கள்

    வடகிழக்கு மாநிலங்களில்தான் நாய் கடத்தல் குற்றங்களும் அதிகம். அதிலும் பிற மாநிலங்களில் இருந்து நாகாலாந்துக்கு தெரு நாய்களை கடத்திச் செல்லும் குற்றங்கள் மிக அதிகம். ஏனெனில் நாகாலாந்தில் நாய்களே இல்லை என்கிற நிலைமைதான். அப்படி ஒரு ஈடுபாடு நாய் கறி மீது.

    நாகாலாந்தில் நாய் கறிக்கு தடை

    நாகாலாந்தில் நாய் கறிக்கு தடை

    இந்த நாய்கறி விற்பனைக்கு எப்படியாவது தடை போட்டுவிட வேண்டும் என்பது விலங்கு நல ஆர்வலர்களின் நீண்டகால அஜெண்டா. இதனை அண்மையில் நாகாலாந்து மாநில அரசு நிறைவேற்றிவிட்டது. அதாவது நாகாலாந்தில் நாய் விற்பனை சந்தை, இறைச்சிக்கு தடை விதிப்பதாக அம்மாநில அரசு அறிவித்தது.

    அதெப்படி தடை?

    அதெப்படி தடை?

    ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. நாங்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை எப்படி அரசு தீர்மானிக்கலாம்? எங்கள் கலாசாரத்தின் வெளிப்பாடாக இருக்கும் நாய்கறி உண்பதை எப்படி தடை செய்யலாம்? எங்கள் தேசிய இனப் பண்பாட்டின் மீதான தாக்குதல் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது நாகா இனமக்களின் தாய்நிலம்.

    English summary
    Naga Civil Rights Groups had opposed to Ban on dog meat sale in Nagaland.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X