For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி காங். இன்பீச்மென்ட் தீர்மானம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் தீர்மானத்தை கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் தீர்மானத்தை கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை ஆதரித்து திமுக, ஆர்ஜேடி,தேசியவாத காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.

வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார், முக்கியமான வழக்குகளை ஜூனியர் நீதிபதிகளுக்கு ஒதுக்குகிறார் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது மூத்த நீதிபதிகள் 4 பேர் முன்வைத்தனர். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடர்புடைய நீதிபதி லோயா மரண வழக்கில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்பதும் இவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.

இந்தியாவின் நீதித்துறையிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகளே இப்படி ஒரு குற்றச்சாட்டை பத்திரிக்கைகளிடம் கூறியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது நீதிமன்ற விவகாரம் இதில் மத்திய அரசு தலையிட வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டது.

காங். கொண்டு வரும் இம்பீச்மென்ட் தீர்மானம்

காங். கொண்டு வரும் இம்பீச்மென்ட் தீர்மானம்

எனினும் இந்த குற்றச்சாட்டு குறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அப்போதே வலியுறுத்தினார். இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்வதற்கான இம்பீச்மென்ட் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

ஓரிரு நாளில் நாடாளுமன்றத்தில்

ஓரிரு நாளில் நாடாளுமன்றத்தில்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடந்து வருகிறது. இந்தக் கூட்டத் தொடரிலேயே மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முயல்கிறது காங்கிரஸ். இதனையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக, இம்பீச்மென்ட் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில் அந்த கட்சி ஈடுபட்டுள்ளது.

காங்.கிற்கு ஆதரவு

காங்.கிற்கு ஆதரவு

இதற்காக, கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது . சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்,திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கட்சியின் எம்பிகள் காங்கிரஸ் கட்சியின் இம்பீச்மென்ட் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாக கையெழுத்து போட்டுள்ளனர்.

அடுத்தடுத்த பரபரப்புகள்

அடுத்தடுத்த பரபரப்புகள்

நாடாளுமன்றத்தில் ஓரிருநாளில் தலைமை நீதிபதியை நீக்கம் செய்ய கொண்டுவரப்பட உள்ள இம்பீச்மென்ட் தீர்மானம் தொடர்பாக பிரசாந்த் பூஷணுடன் மமதா பானர்ஜி ஆலோசனை நடத்தி வருகிறார். தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், இடது சாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது காங்கிரஸ் கட்சி கொண்டு வரவுள்ள இம்பீச்மென்ட் தீர்மானம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Congress decides to move impeachment motion at Parliament against Chief Justice of India Dipak Misra and some other opposition parties have gave support for an impeachment motion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X