For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் வேட்பாளர் விவகாரம்... காங்- ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்களிடையே அடிதடி

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    காங்- ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்களிடையே அடிதடி- வீடியோ

    அகமதாபாத் : நேற்று மாலை குஜராத் தேர்தலுக்கான காங்கிரஸின் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியானது. அதிலேயே கடும் குளறுபடிகளுக்குப் பிறகு தான் அறிவிக்கப்பட்டது.

    Clash Between PAAS Leaders and Congress Cadres In Surat Over Ticket Distribution

    தொடர்ச்சியாக அங்கு 22 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ் கடுமையாக முயற்சித்து வருகிறது. பா.ஜ.க.,வின் வாக்கு வங்கியான பட்டேல் சமூகத்திற்கு அரசு மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

    பட்டேல் இன போராட்டக்குழுவின் தலைவர் ஹர்திக் பட்டேலை காங்கிரஸின் பல முக்கியத் தலைவர்கள் சந்தித்து ஆதரவை கோரி உள்ளனர். டிசம்பர் மாதம் 9ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இதுவரை பட்டேல்கள் தங்களது ஆதரவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், பட்டேல்களிடம் கலந்தாலோசிக்காமல் நேற்று வேட்பாளர் பட்டியல் வெளியானதால், பட்டேல் அமைப்பினர் சூரத் நகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தைத் தாக்கினர். இதனால் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பட்டேல் அமைப்பினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது.

    இதனிடையே பத்திரிகையாளர்களைச் சந்தித்த பட்டேல் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தினேஷ் பாம்பனியா பட்டேல், காங்கிரஸ் எங்களுடைய கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றால் ஆதரவு கொடுப்பது குறித்து நாங்கள் வேறுமாதிரி முடிவு எடுக்க வேண்டி இருக்கும் என்றார்.

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி, பட்டேல் போராட்டக்குழு உறுப்பினர்கள் காங்கிரஸின் ஏஜெண்டாக செயல்படுகிறார்கள் என்பது இப்போது வெளியே வந்துவிட்டது என்று விமர்சித்து உள்ளார். இந்நிலையில், ராஜ்கோட்டில் நடக்க இருந்த ஹர்திக்கின் பேரணி நேற்று ரத்து செய்யப்பட்டது.

    English summary
    Clash Between PAAS Leaders and Congress Cadres In Surat Over Ticket Distribution. Gujarat CM Vijay Rupani Calls PASS leaders are Agents of INC
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X