For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபரிமலையில் பாஜகவினர் போராட்டம்.. பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    தெய்வ குற்றமே காரணம்- சொல்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் | பினராயி விஜயன் வீடு முற்றுகை- வீடியோ

    பத்தனம்திட்டா: கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட்ட போராட்டம் நடத்திய பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் நுழையலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் தீர்ப்பை அமல்படுத்த காலஅவகாசம் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தேவஸம் போர்டு மனு தாக்கல் செய்திருந்தது.

    இதனிடையே கோயில் நடை கடந்த வெள்ளிக்கிழமை 3-ஆவது முறையாக திறக்கப்பட்டது. கடந்த மாதத்தில் நடந்த மோதல்களை கருத்தில் கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

    போலீஸார் அமல்

    போலீஸார் அமல்

    சபரிமலையில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவஸம் போர்டு உத்தரவுக்கிணங்க ஹரிவராசனம் பாடி முடித்தவுடன் கோயிலுக்குள் தங்க யாருக்கும் அனுமதி இல்லை என்ற விதிமுறையை போலீஸார் அமல்படுத்தினர்.

    பாஜக தலைவர்

    பாஜக தலைவர்

    அப்போது சிலர் கோயிலை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர். போலீஸார் தடுத்தும் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயற்சித்த பாஜக தலைவர் சுரேந்திரனை போலீஸார் கைது செய்தனர்.

    போராட்டம்

    போராட்டம்

    போலீஸாரின் கட்டுப்பாடுகள் , 144 தடை உத்தரவு, இரவு நேரங்களில் கோயிலில் தங்க தடை ஆகியவற்றை திரும்ப பெற கோரி 100-க்கும் அதிகமான பேர் நேற்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்ததால் பெரும் பதற்றம் நிலவியது.

    முற்றுகை

    முற்றுகை

    நள்ளிரவில் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் கொச்சி, ஆரன்முலா, கொல்லம், ஆழப்புழா, தொழுபேடு, மலப்புரம் மற்றும் இடுக்கி ஆகிய பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து போலீஸாரின் செயலை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய போராட்டங்களை பாஜக இளைஞரணியினர் நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Nearly 80 people were detained at the Sabarimala temple late last night triggering massive protests by the BJP and the RSS in multiple parts of Kerala, including the Chief Minister’s home.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X