For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமல் உள்ளிட்ட தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!

By Shankar
Google Oneindia Tamil News

தூய்மை இந்தியாவை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்ட கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை தேநீர் விருந்தளித்தார்.

நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, அமலா நாகார்ஜுனா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தூய்மை இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Clean India ambassadors including Kamal meet The President

ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் நடைபெற்ற இந்த உரையாடலின் போது, சிறப்பு விருந்தினர்களின் கருத்துக்களை அவர்கள் கேட்டறிந்தார்கள்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஆலோசனைகளையும் ஏற்று, இதற்கான பணிகளை செம்மைப்படுத்த உறுதி மொழியும் அப்போது எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான கையேட்டின் முதல் பிரதியை பிரணாப் முகர்ஜியிடம் வழங்கினார். அத்துறை இணை அமைச்சர் பாபுலால் சுப்ரியோ திட்டத்தின் சிறப்புகள் குறித்து தூதர்களிடம் விளக்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சௌரவ் கங்குலி, முகம்மது கைஃப், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் அரூண் பூரி, ராமோஜி ராவ், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, எழுத்தாளர் சேத்தன் பகத், வடகிழக்கு தில்லி தொகுதி மக்களவை பாஜக உறுப்பினர் மனோஜ் திவாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இத்திட்டத்திற்கான தூதர்கள் தங்களின் ஆளுமையை முழுமையாக பயன்படுத்தி, தூய்மை இந்தியாவை பிரபலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

English summary
PM Narendra Modi's clean India Project Ambassadors including actor Kamal Hassan have met President Pranabh Mukherjee yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X